24 special

டெல்லியில் ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த புதிய திருப்பம்...!

annamalai
annamalai

அதிமுகவுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு, டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, ‘என் மண் என் மக்கள்’ 3ஆம் கட்ட யாத்திரையும் ஒத்திவைக்கப்பட்டது.இதையடுத்து தமிழக ஊடகங்கள் பலவும் அண்ணாமலை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து மாற்ற படுகிறார், அண்ணாமலை மீது டெல்லி தலைமை அதிருப்தியில் இருக்கிறது, அதிமுகவுடன் கூட்டணி சேர பாஜக மேலிடம் விரும்புகிறது என முன்னணி ஊடகங்கள் தொடங்கி 500 பார்வையாளர்கள் வைத்து இருக்கும் யூடுபர் வரை செய்தி வெளியிட்டு வந்தனர்.கொஞ்சம் கூட அடிப்படை ஆதாரம் இன்றி செய்திகள் வெளியான நிலையில் பாஜக தொண்டர்கள் பலரும் குழம்பி இருந்தனர், பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டு சில யூடுப்பர்கள் சிலரும் அண்ணாமலை மீது உள்ள பொறாமை காரணமாக தங்கள் பங்கிற்கு தகவலை மாற்றி மாற்றி பகிர்ந்து வந்த நிலையில் TNNEWS24 உறுதியாக கூறியது அண்ணாமலைக்கு டெல்லி தலைமை ஆதரவு தெரிவித்தது என்றும் அதோடு நில்லாமல் அடுத்த கட்ட தேர்தல் பணியை தொடங்கவும் பாஜக மேலிடம் பச்சை கொடி காட்டி இருப்பதாக நாம் முதலில் செய்திகள் வெளியிட்டோம்.


அதன் பிறகு ஆங்கில ஊடகங்களும் அண்ணாமலைக்கு பாஜக தேசிய தலைமை ஆதரவு தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியிட்டன,இந்நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பிய அண்ணாமலையை பேட்டி எடுக்க விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குவிந்து இருந்தனர்.அண்ணாமலை பேட்டியளிக்காமல் நடந்து சென்றார் அப்போது அண்ணா ஒரு ரெண்டு வார்த்தை என ரிப்போர்ட்ர்கள் கேக்க அண்ணா இப்போது எழுதிய கதை போல் மேலும் 2 நாட்களுக்கு கதை எழுதிக் கொள்ளுங்கள் என தமிழகத்தை சேர்ந்த சில ஊடகங்களை கலாய்த்து சென்றார்.தமிழக ஊடகங்கள் 90% நேற்று அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய தேசிய தலைமையிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து இருப்பதாக செய்திகள் வெளியிட்ட நிலையில் அப்படி எந்த வித முன்னெடுப்பும் அண்ணாமலை எடுக்கவில்லை என்று அண்ணாமலை தரப்பில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை அண்ணாமலை நேற்று இரவு டெல்லியில் இருந்து திரும்பிய கையோடு இன்னும் பல கதைகளை எழுதுங்கள் என கூறியது தமிழக ஊடகங்களின் தரத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

இது ஒரு புறம் என்றால் நாளை பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் முடிந்த பின்பு அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் டெல்லியில் நடந்த விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக போலி செய்திகளை பரப்பிய ஊடகங்கள் சிலவற்றிற்கு அங்கு வைத்தே பதிலடி கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.அண்ணாமலை முன்னெடுக்கும் அரசியலுக்கு பாஜக தேசிய தலைமை குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஆகியோர் ஆதரவாக கருத்து தெரிவித்து இருப்பதால் வரும் நாட்களில் அதிமுக பைல்ஸ் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கு இடையில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம் எல் ஏ கள் சந்தித்து இருப்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். மொத்தத்தில் அண்ணாமலையின் டெல்லி பயணம் அண்ணாமலைக்கு மேலும் வலுவை கொடுத்து இருப்பதால் திமுக அதிமுக என இரண்டு கட்சிகளும் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற அச்சத்தில் இருக்கிறார்களாம்.