24 special

யாருடன் கூட்டணி? ஓபிஎஸ் இன்று ஆலோசனை!

annamalai, ops
annamalai, ops

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே பனிப்போர் நிலவிவந்த நிலையில் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி தொடரப்போவது இல்லை என அறிவித்தது. கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் இல்லை, சட்டமன்ற தேர்தலிலும் இல்லை என தெரிவித்தனர். இந்த அறிவிப்பின் மூலம் பன்னீர்செல்வம் தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் பாஜக தலைமையில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. அதிமுக விலகியதும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து நின்று போட்டியிடும் என தகவல் வெளியானது.இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகிய பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியது; பாஜகவுக்கு நம்பிகை துரோகம் செய்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்ற சொல்ல அவருக்கு என்ன அருகதை இருக்கு? என அதிரடியாக விமர்சிக்க தொடங்கினர் ஓபிஎஸ். தொடர்ந்து பேசிய அவர் பாஜக மேலிடத்தில் இருந்து எனக்கு தொலைபேசியில் பேசி கொண்டு இருக்கின்றனர்.


கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்தார். இவர் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகருடன் கூட்டணியில் இருக்கிறார். எனவே இருவரும் பாஜக உடன் கூட்டணிக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. இருவரையும்  டெல்லி தலைமை நேரில் அழைத்துள்ளதாகவும் , விரைவில் டெல்லி சென்று கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தலாம் என தகவல் வந்தன. தமிழகத்தில் இன்று வரை பாமக, தேமுதிக, ஓபிஎஸ்(அதிமுக), அமமுக கட்சிகள் இது நாள் வரை கூட்டணி குறித்து அறிவிக்க வில்லை. மேலும் இவர்கள் அனைவரும் பாஜகவில் இனைய அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் பாஜகவை விட்டு விலகியதற்கு தண்டனையை நிச்சயம் எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார். மேலும், பாஜக உதவியால் தான் எடப்பாடி ஆட்சி நடத்தினர். நம்பிக்கை தூரோகம் செய்வதே இபிஎஸ்க்கு பழக்கமாகி விட்டது  என விமர்சித்தார். இவரின் பேச்சு மூலம் இவரும் விரைவில் பாஜகவுடன் கைகோர்ப்போர் என தகவல் வெளியாகின.

இந்நிலையில் பன்னீர்செல்வம், தினகரன் இருவருக்கும் டெல்லியில் இருந்து அழிப்பு வந்ததாகவும், மத்திய அமைச்சர்களை சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தலாம் என கூறப்படுகிறது . இந்நிலையில் இன்று அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் சென்னையில்  தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம், தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்திற்கு பின் பாஜக உடன் கூட்டணியா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி முறிவிற்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று மத்திய அமைச்சர்களுடன் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார். நாளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர்களுடன்  ஆலோசனை நடக்க உள்ளார்.  இந்த ஆலோசனைக்கு பிறகே பாஜக முக்கிய முடிவு வெளியிடும் என கருதப்படுகிறது.