24 special

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி மறப்பதற்குள்... ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்த சம்பவம்!

AR Rahnan
AR Rahnan

இசை நிகழ்ச்சி ரத்து அதற்கு ஏன் என்னுடைய பெயரை களங்கம் செய்திர்கள்?, தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினரிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.  கடந்த மாதம் சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி மழையின் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது, வேறு இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் அங்கு எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் கூட்டம் கூடியதால் பல பேர் உள்ளே அனுமதிக்க முடியாமல் திரும்பி சென்றனர், மேலும், ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டது. குளறுபடியால் ஏ.ஆர். ரஹ்மானிற்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் ரசிகர்களிடம் மனவருத்தத்தை ஏற்படுத்தியது. மறுநாளே ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தளத்தில் "நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு தானே பொறுப்பேற்பதாக கூறி மன்னிப்பு தெரிவித்திருந்தார்". மேலும் நிகழ்ச்சியின் டிக்கெட் வைத்திருந்தவர்களுக்கு அவரே பணத்தை திருப்பி வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியின் குளறுபடிகள் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்த ஏ.ஆர்.ரகுமான் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சம்பவம் மறப்பதற்குள் ரஹ்மான் மீது செக் மோசடி புகார் அளிக்கப்பட்டது.2018ம் ஆண்டு தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு மூலம் இசை நிகழ்ச்சி நடத்த அதில்,  ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தமாகி அவருக்கு முன்பணமாக ரூ. 29.50 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இந்நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்க வில்லை. இதனால் நிகழ்ச்சி ரத்து செயப்பட்டு, ரஹ்மானுக்கு கொடுத்த பணம் 29.50 லட்சம் திருப்பி கேட்ட பொழுது, ரகுமான் தரப்பில் இருந்து முன் தேதியிட்டு காசோலை வழங்கப்பட்டது. ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாததால் வங்கியில் இருந்து திருப்பி அளிக்கப்பட்டது. எனவே ரஹ்மான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்க அமைப்பு செயலாளர் விநாயகக் செந்தில் என்பவர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளிக்கப்பட்டு.

வழக்கறிஞர் மூலம் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  இது தொடர்பாக, ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், இசைத் துறையில் பல்வேறு விருதுகளை பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரகுமான் சமூகத்தில் பல தலங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார். அவரை பற்றி இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கம் கூறியுள்ள குற்றச்சாட்டு அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது. அந்த அமைப்புடன் ரகுமான் எவ்விதத்திலும் தொடர்பிலோ, ஒப்பந்தத்திலோ இல்லாத நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் ரகுமானுக்கு அனுப்பிய நோட்டிஸை மூன்று நாட்களில் திரும்ப பெற வேண்டும் என்றும் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டால் முன்பணம் திருப்பி தரப்படாது என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டுமென பதில் நோட்டிஸை ரஹ்மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.