24 special

புதுவிதமான கல்யாண பெண்ணின் கொண்டை!!!

MAKEUP
MAKEUP

முந்தைய காலங்களில் நடந்த திருமணங்கள் பெரும்பாலும் தமிழ் முறைப்படி சாதாரணமாக கோவிலிலோ அல்லது ஒரு மண்டபத்திலோ உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூடி நடத்துவார்கள். அதில் மாப்பிள்ளையும் பொண்ணும் மிகவும் எளிமையான முறையில் அவர்களுக்குத் தெரிந்த சின்ன சின்ன  அழகு சாதனங்களை பயன்படுத்தி  தயாராகுவார்கள். பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக இருந்தாலும் கூட மிகவும் அழகாகவும், எந்த ஒரு ஆடம்பர செலவும் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நடக்கும் திருமணங்களில் மிகவும் அதிகமாக எல்லாவற்றிலும் ஆடம்பரமாக செலவழிக்கின்றனர்.அதிலும் சிலர் முகமும் அவர்களின் ஆடை அணிகலன்களும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பல லட்சம் வரையிலும் செலவு கூட  செய்கின்றார்கள். அதிலும் சிலர் ஏதாவது ஒரு திருமணங்களை பார்த்துவிட்டு அதில் வருவதைப் போலவே  நம் திருமணத்திலும் மேக்கப் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.


மேலும் சிலர் இது போன்று இல்லாமல் நாம் தனி ஒரு ஸ்டைலை உருவாக்க வேண்டும் என்று நினைத்து புது மாதிரியாக ஏதாவது ஒரு மேக்கப் ஐடியாக்களை மேற்கொள்கின்றனர். இவர்கள் புது மாதிரியான ஐடியாக்களினால் அழகு படுத்திக் கொள்வதில் எல்லா விதமான ஸ்டைல்களும் அழகாக தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சில ஸ்டைல்களை பார்ப்பதற்கு மிகவும் காமெடியாகவும் இருக்கும். என்னடா இப்படி கூட ஒரு மேக்கப் செய்வாங்களா என்று நினைக்கும் அளவிற்கு தற்போது நடக்கும் திருமணம் விழாக்களில் பெண்களுக்கு செய்யப்படும் அலங்காரங்கள் மாறிக்கொண்டே வருகிறது. மேலும் சிலர் ஏதாவது ஒரு திருமணத்தையோ அல்லது தங்களுக்கு பிடித்த பிரபலத்தின் திருமணத்தையோ பார்த்துவிட்டு இதே போல் நானும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொள்கின்றனர். மேலும் சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று வெளிநாடுகளில் சென்று திருமணங்கள் செய்து கொள்கின்றனர். அங்கு உள்ள கலாச்சாரத்தை பின்பற்றி அதற்கு ஏற்றார் போல் அலங்காரங்களும் செய்து திருமணங்களை செய்து கொள்கின்றனர். 

இது போன்ற பல  செய்திகளை நாம் அடுத்தடுத்து பார்த்துக் கொண்டே தான் உள்ளோம். மேக்கபை  தவிர பெண்ணின் சேலைக்கு மேட்ச் ஆக எடுக்கும் பிளவுஸில் பல மாதிரியான டிசைன்களும் செய்யப்படுகிறது. ஆரி ஒர்க் எனப்படும் கலைகளை திருமணங்களில் மணப்பெண் போட்டுக் கொள்ளும் சட்டையில் பலவிதமான டிசைன்களை மதித்து அதைப் பார்ப்பதற்கே மிகவும் அழகாக வடிவமைத்து போட்டுக் கொள்கின்றனர். இதற்கு தற்போது அதிக அளவில் பணங்களும் செலவழிக்கிறார்கள், அடுத்தபடியாக கைகளில் மருதாணி வைத்துக் கொள்ளும் பழக்கம் போய், இன்று அனைத்து மணமகள்களும் கையில் மெஹந்தி போட்டுக் கொள்ளும் கலாச்சாரம் வளர்ந்து விட்டது. மேலும் இதற்கெனவே ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.மேலும் மெஹந்தி போட்டுக் கொள்வதற்கு எனவே தனியாக மெஹந்தி பங்க்ஷன் என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன.

இது எல்லாம் தமிழ் கலாச்சாரத்தின் முறைப்படி நடக்கும் திருமணம்களில் நம் முன்னோர்கள் யாரும் குறிப்பிடாத ஒன்றாகும். இதனை தொடர்ந்து ஃபோட்டோஸ்கள் என அது தனியாக அதிக அளவில் செலவழித்து வருகின்றனர். இந்த நிலையில் மணப்பெண்ணின் ஹேர் ஸ்டைல் கூட பலவிதமாக முயற்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் தற்போது ஒரு மணப்பெண்ணின் ஹேர் ஸ்டைல் பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக உள்ளது. இது போன்ற ஹேர் ஸ்டைல் இதுவரை யாரும் பார்த்தது இல்லாதது போல் இருப்பதால் பார்த்தவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இந்த ஹாஸ்டல் முழுவதும் உண்மையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை பார்க்கும் அனைவரும் இந்த ஹேர் ஸ்டைல் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே என்று கலாய்த்து வருகின்றனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!