கிரிவலம் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வருவது திருவண்ணாமலையில் மேற்கொள்ளும் கிரிவலம் தான்!! இதன்பிறகு தான் மற்ற கோவில்களில் நடக்கும் கிரிவலங்கள் எல்லாம் நமது நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த பிரசித்தி பெற்ற கிரிவளங்களில் ஒன்றானது தான் இந்த திருவண்ணாமலையை சுற்றி நடக்கும் கிரிவலம் ஆகும். ஒரு சில கோவில்களில் திருவிழாக்கள் எப்போது நடக்கிறதோ அப்போதுதான் அந்த மலையை சுற்றி கிரிவலம் நடப்பார்கள். ஆனால் திருவண்ணாமலையை பொருத்தவரையில் லிங்கமே மலையாக அமைந்திருக்கும் காரணத்தினால் இங்கு செல்லும் கிரிவலம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த திருவண்ணாமலையானது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவான தனிச்சிறப்புடைய மலையாகும். பிரம்மனுக்கும் விஷ்ணு இருக்கும் யார் பெரியவர் என்ற போட்டி நடக்கும் பொழுது முதலும் முடிவும் இல்லாமல் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சியளித்த மலை தான் இது. மேலும் பார்வதி சிவபெருமானின் கண்களை மூடிவிட அதனால் உலகமே இருளில் சூழ்ந்து விட்டதாம்.
மேலும் பார்வதிக்கு தோஷம் ஏற்பட அந்த தோஷத்தில் இருந்து பார்வதி வெளி வருவதற்காக தவம் மேற்கொண்டு இருப்பார். அப்போது அவரின் முன் சிவன் தோன்றி என்னை நீ மூன்று முறை சுற்றிவென்றால் உனக்கு மோட்சம் கிடைக்கும் என்று கூறியிருப்பார். அதனினால் சிவபெருமானே மலையாக அமைந்திருக்கும் திருவண்ணாமலையை மூன்று முறை சுற்றி வந்து தனது மோட்சத்தை அடைந்திருப்பார் பார்வதி. இவ்வாறு மலையை சுற்றி வருபவர்கள் வேண்டும் வேண்டுதல்களை சிவபெருமான் நடத்தி வைக்கும் காரணத்தினால் யாரெல்லாம் இந்த மலையை சுற்றி வருகிறார்களோ அவர்கள் கேட்கும் வேண்டுதல்களை சிவபெருமான் நடத்தி வைக்க வேண்டும் என்று பார்வதி கேட்டுக் கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.இந்த காரணத்தினாலேயே அதிக அளவில் பக்தர்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர்.மேலும் பல சித்தர்களும் முனிவர்களும் தினம்தோறும் இந்த மலையினை வணங்கி வருகின்றனர்.
இங்கு கிரிவலம் வருவதற்கு என்று நேரம் காலம் எதுவும் கிடையாது என்பதால் எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் இந்த கோவிலில் கிரிவலம் வருகின்றனர். திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்ற சொல்லிற்கு ஏற்றார் போல் இந்த மலையினை கிரிவலம் செல்லும் பக்தர்கள் பலர் உள்ளனர். 14 கிலோ மீட்டர் சுற்றளவு பரந்த விரிந்த முழு மலையையும் நடந்து சென்று வந்தால் மட்டுமே அதற்குரிய பலன் கிடைக்கும் என்று முன்னோர்கள் பலர் கூறியுள்ளனர். முதலில் கிரிவலம் வருபவர்களுக்கு நடப்பது மிகவும் கடினமாகவும், சோர்வு தரக்கூடிய வகையிலும் அமைந்திருக்கும். ஆனால் உண்மையிலேயே சிவன் மீது பக்தி கொண்டு அவர்களின் வேண்டுதல்களை மனதில் நினைத்து நடந்தால் சுலபமாக இந்த மலையினை சுற்றி வரலாம் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து மலையினை சுற்றி வந்து தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் மீண்டும் மீண்டும் இந்த கோவிலுக்கு வந்த கிரிவலம் மேற்கொள்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த மயமாகவே உள்ளனர். இந்த நிலையில் தற்போது வயதான அம்மா ஒருவர் கிரிவலம் மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் தலையில் பன்னிரு திருமுறைகளை சுமந்து கொண்டே கிரிவலம் சுற்றி வருகிறார். இவர் பாண்டிச்சேரியில் இருந்து பலமுறை கிரிவலத்திற்கு வந்த பொழுதெல்லாம் பல தடைகள் ஏற்பட்டதால் தற்போது இங்கேயே வீடு எடுத்து தங்கி தினமும் கிரிவலம் மேற்கொண்டு வருகிறாராம். இன்னும் எத்தனை நாட்கள் கிரிவலம் மேற்கொள்வீர்கள் என்று கேட்டபோது அது எல்லாம் அப்பன் கையில் உள்ளது என்று கூறியிருப்பதை பார்க்கும்போது மிகவும் வியப்பாகவே உள்ளது. தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!