24 special

NCB அதிகாரிகளிடம் ஆஜரானார் அமீர்.. பரபரப்பாகும் விசாரணை..!

Ameer, Jaffer
Ameer, Jaffer

இந்தியா முழுக்க உலுக்கிய சம்பவம் போதை பொருள் கடத்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜாபர் சாதிக் விவகாரத்தில் மத்திய போதை போல் தடுப்பு அதிகாரிகள் மூலம் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக இயக்குநர் அமீர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.


இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்துவதாக வெளிநாடுகளில் இருந்து வந்த தகவலின் பேரில் கடந்த மாதம் என்சிபி அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது டெல்லியில் உள்ள ஒரு குடோனில் சுமார் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் பிடித்தனர். அது தொடர்பாக சிலரை கைது செய்து விசாரித்ததில் தமிழகத்தை சேர்ந்தவரும் திமுகவில் அயலக பொறுப்பில் இருந்தவருமான ஜாபர் சாதிக் என்பவை முக்கியமானவர் என்று அவரை கைது செய்தனர். அவரை தொடர்ந்து அவரது கூட்டாளியான சதாவை கைது செய்த்தனர்.

அதனை தொடர்ந்து ஜாபர் சாதிக்யிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர் அதில் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வந்தது. உதயநிதி மனைவி கிருத்திகா இயக்கும் மங்கை படத்திற்கு முதலீடு செய்தது ஜாபர் சாதிக் என்றும் இயக்குனரும் நடிகருமான அமீர் இயக்கி நடிக்கும் இறைவன் மிகப்பெரியவன் படம் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான் மற்றும் இருவரும் ஹோட்டல் நடத்தி வந்ததாகவும் தகவல் வந்த நிலையில், இதனால் இயக்குனர் அமீருக்கு என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தார்.

அதன் அடிப்படையில் அமீர் இன்று டெல்லியில் உள்ள என்சிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் முடிவில் தான் போதைப்பொருள் கடத்தலில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும். ஆனால், அரசியல் விமர்சகர்களால் கூறப்படுவது நிச்சயமாக அமீருக்கு தொடர்பு இருக்கின்றது என்றும் அவரை கைது செய்யலாம் மேலும், இந்த விசாரணைக்கு பிறகு சினிமா துறையில் உள்ள பலருக்கு அடுத்தடுத்து சம்மன் அனுப்பபடலாம் அதன் பிறகு சினிமா துறையில் உள்ள நட்சத்திங்களின் முகத்திரை தெரியவரும் சூழ்நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக வந்த தகவலை போல தேர்தலுக்கு பிறகு அரசியலில் உள்ள தலைவர்களுக்கும் சம்மன் அனுப்பலாம், இது வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம். ஒருவேளை திமுகவுக்கு சம்மன் அனுப்பினால், ஏற்கனவே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக குறித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நேரத்தில் கூடுதலாக எதிர்கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய வாய்ப்பாக அமையலாம் என கூறப்படுகிறது. அதேபோல் ஜாபர் சாதிக் தொடர்பான போதை பொருள் விவகாரம் கடந்து சென்றுவிடமுடியாது நிச்சயம் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.