24 special

திமுக கூடாரத்திற்கு வந்தது புதிய சிக்கல்..! ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த அதிரடி முடிவு..!

I Periyasamy, stalin
I Periyasamy, stalin

வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்ததை ரத்து செய்து ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதில் அமைச்சர் என்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ள்ளது. இதனால் திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கு கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஐ.பெரியசாமி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முக்கியமான துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர் ஐ.பெரியசாமி. தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் கூட்டுறவு துறையில் அமைச்சராக இருந்து வருகிறார். இவர் 2006 முதல் 2011 வரையிலான ஆண்டு திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது அமைச்சர் பெரியசாமி தனது அமைச்சர் பதவியின் அதிகாரத்தை தவறுதலாக தனது லாபத்திற்காக வீட்டு வசதி வாரியத்திற்க்கு சொந்தமான வீட்டை கனேசன் என்ற நபருக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பெரியசாமியை நீர்ப்பரத்தை என விடுதலை செய்தது. அதனை தொடர்ந்து அந்த வழக்குகளின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சூமோட்டோ எனப்படும் முறையில் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கினார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். முதலில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து அவரை விடுவித்தது. அதன் பிறகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து படித்து பார்த்ததில் எனக்கு தூக்கமே வரவில்லை எப்படி விடுவிக்கப்பட்து என கூறினார். அதன் பிற்காடு பொன்முடி குற்றவாளி என கூறி அவருக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதித்தார். பின்னர் அவரே அமைச்சரின் ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிப்பதாகக் கூறினார் இதனால் திமுக அமைச்சர்கள் அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டது.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த வருடம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் ஐ பெரிய சாமியை விடுவித்துச் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு அடுத்த மாதம் 26ம் தேதி எம்எல்ஏ, எம்பியை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க கூறி உத்தரவிட்டார். 

இதனால் திமுக அமைச்சர் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய அன்னைவரையும் விசாரியாக் கூறினார். ஏற்கனேவ அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி சிறையில் இருந்து வருகிறார். அடுத்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என நிரூபிக்கப்பாட்டு இரண்டு ஆண்டு தண்டனை விதித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது அமைச்சர் பெரியசாமி இணைத்துள்ளார். தேர்தல் வரும் நேரத்தில் திமுகவில் இருக்கக்கூடியவர்கள் சிறைக்கு என்றால் கட்சியின் பெயர் என்னவாகும் என அறிவாலய வட்டாரங்கள் யோசித்து வருகிறார்களாம். வரும் நாட்களில் அதிமுக மற்றும் திமுக அமைச்சர்கள் சிக்கும் நிலைக்கு செல்வதால் இரு கட்சிகளும் மாற்று கட்சியை தேடி செல்கின்றனர் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. இதனால் இணையத்தில் மொத்த திமுக அமைச்சராக்களுக்கும் புழல் சிறையில் தான் அமைச்சரவை கூட்டத்தை கூட வேண்டும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.