24 special

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய திமுக எம்பி மகன்! கடைசியில் அறிவாலயம் செய்ததுதான் ஹைலைட்டே...

mkstalin,mp krirajan
mkstalin,mp krirajan

ஒவ்வொருவரது வாழ்க்கையில் பணம் உணவு நீர் போன்றவை எவ்வளவு முக்கியமானது அவற்றிற்கெல்லாம் மிக முக்கியமானது உயிர்! ஏனென்றால் அதை தக்க வைத்துக் கொள்வதற்காகவே மற்ற அனைத்தையும் ஈட்ட முயற்சிக்கின்றோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தினந்தோறும் பல உயிர்கள் வீணாக படி போகிறது அதிலும் குறிப்பாக விபத்துகள் மூலம் ஏற்படும் உயிர் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது இதனை தடுப்பதற்கு போலீஸ் தரப்பில் பல நடவடிக்கைகள் மற்றும்  அபராதங்களை விதித்து வருகிறது ஆனால் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்துமே மோகத்தை ஏற்படுத்துகிறது. கல்லூரிக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக எனக்கு வேண்டும் அதுவும் அதிவேகமாக செல்லக்கூடிய வாகனம் நிச்சயமாக வேண்டும் என்று அடம் பிடித்து வாங்குகிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு எமனாக மாறி விடுகிறது. 


இதில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் நபர்கள் மட்டும் விபத்திற்கு உள்ளாவதில்லை இந்த விபத்தால் அதே சாலையில் வருகின்ற மற்ற சில வண்டிகளும் விபத்தில் சிக்குகிறது. இந்த விபத்துக்கள் பெருமளவில் குடும்பத்திலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த விபத்தில் சிக்கிக் கொள்பவர்கள் விபத்தை ஏற்படுத்துபவர்கள் என பலரும் காவல்துறையின் விசாரணைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் வழக்கும் அவர்கள் மீது பதியப்படும் ஆனால் சிலர் தங்களிடம் இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி இந்த விபத்தில் தான் சிக்காத மாதிரியான ஒரு மாயை பிம்பத்தை உருவாக்கி அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ஆனால் இதில் முற்றிலும் பாதிக்கப்படுவது விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே! 

இது போன்ற ஒரு சம்பவம் தற்போது நிஜத்திலும் நடந்து செய்திகளில் பரபரப்பாக வெளியாகிறது. அதாவது மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார் hyundai கார் ஒன்று நள்ளிரவில் அதிவேகத்தில் சென்றுள்ளது. அப்போது இந்த கார் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள இரண்டு இரு சக்கர வாகனங்களை மோதி நிற்காமல் சென்றுள்ளது. இப்படி நள்ளிரவில் அதிவேகமாக சென்ற குண்டாய் கார் இருசக்கர வாகனங்கள் இரண்டு மோதி விட்டு நிற்காமல் சென்றது அந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்ட அதே சாலையில் வந்த சக வாகன ஓட்டிகள் விபத்தை ஏற்படுத்திக் கொண்டு நிற்காமல் சென்ற காரை விடாமல் விரட்டி சென்று, இப்படி தன்னை சில வாகனங்கள் விரட்டி வருவதை தெரிந்த கார் இன்னும் அதிவேகமாக சென்று செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகில் இருந்த இரும்பு தடுப்பு மீது மோதி நின்றது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் காரை சூழ்ந்து கொண்டு காருக்குள் மது போதையில் இருந்த இளைஞர் மற்றும் பெண்களைப் பிடித்துள்ளனர். 

மேலும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திடம் ஒப்படைத்து நடந்தவற்றை கூறி புகார் அளிக்க முற்பட்டுள்ளனர் ஆனால் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த இளைஞர் திமுக மாநிலங்களவையும் பி கிரிராஜனின் மகன் செந்தமிழன் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்ததை அடித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை மட்டும் நடத்தி வந்துள்ளனர் போலீசார். விபத்தை ஏற்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுவான கருத்து ஆனால் பதவியில் இருப்பவரின் மகன் என்று தெரிந்த பிறகு காவல்துறையும் இவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் புகாரையும் ஏற்றுக் கொள்ளாமல் விசாரணையை மட்டும் தொடர்ந்து உள்ள செய்தி தற்போது இணையங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

இதன்காரணமாக எம்.பி கிரிராஜனை அழைத்து உதயநிதியின் டீம் செம்ம டோஸ் விட்டதாம், தேர்தல் வருகிறது அடக்கிக்கொண்டு இருக்கவேண்டும் என, இந்த தகவல் அறிவாலயத்தில் இருந்து கசிந்துள்ளது.....