24 special

செந்தில் பாலாஜி வழக்கில் புது மாற்றம்...!அதிர்ந்து கிடைக்கும் ஆளும் கட்சி...!

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

செந்தில் பாலாஜி வழக்கில் பல நாட்களாக நீடித்து வந்த ஆடு புலி ஆட்டத்திற்கு இன்று முடிவு தெரிந்து இருக்கிறது, தீர்ப்பு வந்த அடுத்த நொடியே செந்தில் பாலாஜி இருக்கும் புழல் சிறையில் இப்போதே அதிரடி மாற்றம் தொடங்கி  இருப்பது செந்தில் பாலாஜி தரப்பையும் ஆளும் திமுகவின் தலைமையையும் அதிர செய்து இருக்கிறது. அதிலும் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் எனது கட்சிகாரர் உடல் நிலை சரியில்லாத நபர் என கூற அதற்கு அமலாக்கதுறை அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என நீதிமன்றத்திலேயே தெரிவித்தது மேலும் திமுகவினரை அதிர செய்து இருக்கிறது.


செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் இரு தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் தீர்ப்பு வழங்கினார்.

“குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு (2)ன் கீழ் அமலாக்கத் துறை  ஒருவரை கைது செய்யும்போது அந்த நபரை காவலில் வைக்கலாம் என கூறுகிறது. எனவே செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.அமலாக்கத் துறை ஒருவரை கைது செய்யும் போது 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான விவகாரத்தில் அனுபம்  குல்கர்னி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி இருப்பதால், அந்த குறிப்பிட்ட விவகாரம் மட்டும் அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றப்படுகிறது.

இன்று முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 5 நாட்கள் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்” என்று தீர்ப்பு வழங்கினர்.அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு அமலாக்கத் துறை, “அவரது உடல்நிலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்தது வழக்கின் அடுத்த போக்கு என்ன என்பதை உணர்த்தி இருக்கிறது.இதை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜி தொடர்பாக நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

நீண்ட சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை களத்தில் இறங்கிய நிலையில் புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை நேரடியாக டெல்லி அழைத்து செல்ல இப்போது புழல் சிறைக்கு சென்று இருப்பதால் அடுத்தகட்ட நகர்வு என்ன? அடுத்தது யார் என மிரண்டு போயிருக்கிறதாம் அமைச்சரவை வட்டாரம்.