நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு நேற்று இரவு செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். செந்தில் பாலாஜி தனக்கு காலில் காயம் உண்டாகி இருப்பதாகவும் உடல்நிலை சரியில்லை என நீதிபதி அல்லியிடம் கூறினார் அப்போது சட்டம் அனைவருக்கும் சமம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி அமலாக்க துறை செந்தில் பாலாஜியை விசாரணை செய்யலாம் என அனுமதி கொடுத்தார்.
இதை அடுத்து சோகமான முகத்துடன் அமலாக்கதுறை அதிகாரிகள் உடன் சென்றார் செந்தில்பாலாஜி. நேற்று இரவே செந்தில் பாலாஜியிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். ஆனால் செந்தில் பாலாஜி தனக்கு உடல் நிலை சரியில்லை எனவும் தனக்கு தூக்கம் வருவதாகவும் தொடர்ந்து கூறி இருக்கிறார். இதையடுத்து செந்தில் பாலாஜி ஓய்வு எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது.
ஆனால் இன்று காலை முதலும் செந்தில் பாலாஜி தொடர்ந்து சரியான முறையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதையடுத்துதான் அமலாக்கதுறை தனது பாணியில் விசாரணை முறையை தொடங்கி இருக்கிறதாம்.
கரூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு செந்தில் பாலாஜியிடம் தொடர்ச்சியாக கேள்வி கேட்டு அதனை வீடியோ வடிவிலும் பதிவு செய்து வருகிறதாம் அமலாக்கதுறை.
அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர்ந்த நபர்கள் ஆரம்ப காலகட்டத்தில் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் மற்றும் பல்வேறு தகவல்களை அடிப்படையாக கொண்டு கேள்வி எழுப்பி வருகிறதாம். பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாலும் முறையாக செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தாலும் 5 நாள் நீதிமன்றம் காவல் முடியும் தருவாயில் மேலும் 10 நாட்கள் நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜியை எடுத்து விசாரணை செய்யவும் செந்தில் பாலாஜியுடன் தொடர்பில் உள்ள நபர்களை விசாரணை செய்யவும் முழு வீச்சில் அமலாக்கதுறை வட்டாரங்கள் களத்தில் இறங்கி இருக்கிறதாம்.
எதை கேட்டாலும் தெரியாது ஞாபகம் இல்லை என ஒரு வரியில் அதே பல்லவியை பாடிய செந்தில் பாலாஜிக்கு ஆதாரங்களை மேடையின் மீது எடுத்து போட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறதாம் அமலாக்கதுறை, செந்தில் பாலாஜியை நேற்றே அமலாக்கதுறை விசாரணைக்கு தூக்கி சென்ற நிலையில் அடுத்தது எந்த அமைச்சர் என்ன கேஸ் என மிரண்டு போயிருக்கிறதாம் ஆளும் திமுக தலைமை.