தமிழகத்தில் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் நிகழ்வில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருக்கும் வேலையில் நாளுக்கு நாள் தமிழகத்தில் மதம் மாற்றும் நோக்கத்துடன் குழுக்கள் பல இயங்குவது அவ்வப்போது வெளிச்சமாகி வருகிறது.
அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் இயேசு அழைக்கிறார் எங்களுடன் வாருங்கள் என இரண்டு பெண்கள் வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்திருக்கிறார்கள், அதே பகுதியில் வசிக்கும் பெண்ணிடம் கொடுக்க பதிலுக்கு அவர்... ஏன் உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
இப்படி தான் நல்லா இருந்த ஊரில் இரண்டு தெரு முழுவதும் மதம் மாற்றிவிட்டார்கள், இன்னமும் அடங்காவில்லையா? எங்களுக்கு கடவுள் இருக்கிறார் நீங்க உங்க வேலையை பார்த்து கொண்டு செல்லுங்கள் என விரட்டி அடித்தார். அப்போது உங்கள் பெயர் என்ன என பாதிக்கப்பட்ட இந்து பெண் கேட்க பதிலுக்கு தவறு செய்த எந்த பயமும் இன்றி மதமாற்ற நோக்கத்துடன் வந்த பெண் தனது பெயர் மற்றும் முகவரியை கூறுகிறார்.
தமிழகத்தில் திராவிட ஆட்சி இருக்கிறது என்ற தைரியத்தில் மதமாற்ற வந்த பெண் பேசினாரா அல்லது காவல்துறை மற்றும் சட்டமெல்லாம் நம்மை ஒன்றும் செய்யாது என்ற தைரியத்தில் பேசினாரா? என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.
தமிழகத்தில் திமுகவினருக்கு எதிரான கருத்து தெரிவிக்கும் நபர்களை கைது செய்ய வேகம் காட்டும் தமிழக காவல்துறையும், தமிழக அரசும் இது போன்ற சட்ட விதி மீறளில் ஈடுபடும் நபர்களை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
சட்டத்தை மீறி பிற மத்தவர்கள் வீடு தெருக்களில் இது போன்று விதிமீரல்கள் ஈடுபடும் நபர்களை கைது செய்து சிறையில் தள்ளினால் மட்டுமே தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.