24 special

குட்டி கதை சொல்லி செந்தில் பாலாஜியை மீண்டும் பிரச்சனையில் மாட்டி விட்ட திண்டுக்கல் லியோனி

Senthil balaji,dintukal i leoni
Senthil balaji,dintukal i leoni

திமுகவை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி திமுகவை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழ்வதாக எண்ணி மேடையில் பேசிய பேச்சு தற்போது மீண்டும் செந்தில் பாலாஜிக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது.


செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து குட்டி கதை ஒன்றை சொல்லிய லியோனி, இறுதியில் அந்த கதையை வருமான வரித்துறை அதிகாரிகள் உடன் ஒப்பிட்டு பேசி இருந்தார், இங்கு தான் திண்டுக்கல் லியோனி பேசியது சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.

வருமான வரித்துறை ரெய்டு குறித்து திமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் அமைதியாக இருக்கின்றனர், வருமான வரித்துறை சோதனையில் இடம்பெற்ற செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி நண்பர்கள் வரை பலரும் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் லியோனி வருமான வரித்துறை சோதனையை மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாக பேசி இருக்கும் சூழலில், தற்போது மீண்டும் வருமான வரித்துறை அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி இருப்பதாகவும், குறிப்பாக செந்தில் பாலாஜி நண்பருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையின் அடிப்படையில் பல்வேறு பண பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும்,அவருக்கு கொடுக்க வேண்டிய டெண்டர் பில்களை நிறுத்தி வைக்க நெடுசாலை துறைக்கு வருமான வரித்துறை உத்தரவு போட்டு இருக்கிறது.

இது ஒருபுறம் என்றால் கரூரில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட பங்களா குறித்து பல்வேறு விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது, நிலைமை இப்படி இருக்க திண்டுக்கல் லியோனி செக்கிங் இன்ஸ்பெக்டர் கதை சொல்லி மேலும் செந்தில் பாலாஜியை சிக்கலில் சிக்க வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

போனோமா, வாங்கிய காசிற்கு பட்டிமன்றத்தில் அமைச்சரை புகழ்ந்து பேசினோமா என்று இல்லாமல் வருமான வரித்துறை அதிகாரிகளை மறைமுகமாக விமர்சனம் செய்து அடுத்த சிக்கலில் செந்தில் பாலாஜியை சிக்கவைத்து விட்டாரே லியோனி என கருர் உடன் பிறப்புகள் புலம்ப துவங்கி இருக்கின்றனர்.