நாடளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சரியாக இரண்டே வாரங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசுக்கு தமிழக அரசியல் களம் குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றை பரபரப்பாக அனுப்பியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்து ஏப்., 19ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது. நான்கு முனை போட்டியாக அமைந்துள்ள களத்தில் ஆளும் கட்சியான திமுக கடந்த தேர்தலை போல கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி முறித்து கொண்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. பாஜக தலைமையில் ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளது. நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனியாக தேர்தலை சந்திக்கிறது.
தேர்தல் தொடங்க இன்னும் சரியாக இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் களத்தில் மக்களை சந்தித்து அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தேர்தலுக்காக பிரச்சாரத்தில் வேகமெடுத்துள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று தமிழக அரசுக்கு கொடுத்துள்ளது. அதில், அதிமுகவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் உட்பட்ட கிளை, பூத் அளவின் தினமும் மக்களையும், கட்சியினரையும் சந்தித்து வருகிறார்களாம். அப்போது, ஆளும் திமுக அரசுக்கு எதிராக துண்டு பிரச்சாரத்தை மக்களிடம் கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகிறார்களாம்.
அதுமட்டுமில்லாமல், திமுக ஆட்சிக்கு வருவதர்க்கு முன்பாக சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை யென்றும் விரிவாக பிரச்சாரம் செய்கின்றனர். தினமும் திண்ணை பிரச்சாரம் செய்து, தினமும் நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடத்தி அதனை ரிப்போர்ட்டாக அதிமுக தலைமைக்கு அனுப்புகிறார்களாம். இதுதவிர உள்ளூர் வாக்காளர்கள் பணி நிமித்தமாக வெளியூரில் வசித்து வந்தால் அவர்களது முகவரியை கண்டு நேரடியாக அதிமுகவினர் சென்று பிரச்சாரம் செய்து அவர்களை அதிமுகவுக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்கின்றனர்.
இதுதவிர, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 5 இடத்தில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக ஒட்ட சேகரிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொவரு தொகுதிகளிலும் அதிமுகவினர் எப்படி செயல்படுகின்றனர் என்று சென்னையில் ஏற்பாடு செய்திருந்த குழு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு வருகிறாராம். எதாவது குறைபாடுகள் இருந்தால் அந்த குழுவிடம் கூறி அந்த மாவட்ட செயலாளர்களிடம் கூற எடப்பாடி உத்தரவிட்டுள்ளாராம். இப்படி கட்சியினர் உழைத்து வருவதால் பிரச்சாரத்தில் திமுகவி ஓரம் கட்டி விட்டு அதிமுக முன்னேறி சென்று கொண்டு இருக்கிறது.
மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் செய்யும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை விமர்சனம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியானது. அதில், நாற்பதுக்கும் நாற்பது திமுக கூட்டணியே வெல்லும் என கருத்து கணிப்புகள் அதிகப்படியாக வந்தது. அதை திமுகவினரும் பொது வெளியில் கூறி வந்தனர். அதனை தற்போது திமுக தலைவர்கள் யாரும் கூறுவது இல்லை. பிரச்சாரம் செய்தாலும் அது பெரியதாக மக்களிடம் எடுபடவில்லையாம். இதனால், திமுக இந்த தேர்தலில் சறுக்கலை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் பாஜகவும் திமுக குறித்து மக்களிடம் கூறி வருவதால் திமுக இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும் ஏதும் எடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் இது அப்படியே மாறலாம் என்றும் பாஜக முன்னேறலாம் என்றும் உளவுத்துறை கூறியுள்ளது.