சிவனின் அவதாரங்களில் நடராஜன் உருவம் மிகவும் முக்கியமானதாகும். சோழ மன்னன் ஒருவன் சிவனின் நடனத்தை பற்றி அறிந்தவுடன் அவற்றை சிலையாக வடிக்க வேண்டும் என்று நினைத்தான். அதனால் தனது நாட்டில் உள்ள சிறந்த சிற்பிகளை அழைத்து அவர்களை நடராஜர் சிலை செய்யும்படி சொன்னான். அவர்களும் உலோக கலவையை வைத்து சிலை செய்ய ஆரம்பித்தனர் ஆனால் சிலை அவர்கள் நினைத்தபடி சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும் சிலை சரியாக வராததால் மன்னரிடம் கூறினர். ஆனால் மன்னனோ அவர்களிடம் எப்படியாவது சிலையை செய்து ஆக வேண்டும். இல்லையென்றால் அனைவரையும் கொன்று விடுவேன் என்று கூறினாராம். அவர்கள் பலமுறை முயற்சித்தும் சிலை ஒழுங்காக வரவில்லை என்றும், அவர்களின் வாழ்க்கை அவ்வளவுதான் என்ற எண்ணத்தில் இருந்தனர்.இப்போதே அவர்கள் முன் ஒரு முதியவரும், மூதாட்டியும் தங்களுக்கு பசிப்பதாகவும், கஞ்சியை ஊற்றும்படியும் கேட்டனர்.
எரிச்சலில் இருந்து சிற்பிகள் காட்சி கொண்டு இருந்த உலோகங்களை எடுத்து குடியுங்கள் நாங்கள் இறப்பதற்கு முன் ஏதாவது ஒரு புண்ணியமாவது செய்து கொள்கிறோம் என்று அந்த உலோகத்தை அவர்களிடம் கொடுத்தார்களாம். அந்த முதியவர்களும் அதனை வாங்கி குடித்தவுடன் நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர். அதனை பார்த்தவுடன் தங்கள் உயிரை காக்க வந்த மூதாட்டிகள் இறைவனா என்று வியந்து அதனை மன்னனிடம் சென்று கூறினார்கள். பிறகு மன்னனும், இறைவனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்தான். இன்று உலகில் உள்ள பாதி சிவன் கோவில்களில் நடராஜரின் சிலை இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் இந்த நடராஜன் உருவான வரலாறு யாருக்கும் அவ்வளவோ தெரிவது கிடையாது. நடராஜரின் சிலை நடனம் ஆடுவது போல இருப்பதால் தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. நடராஜ பெருமான் பெரும்பாலும் நடனம் மற்றும் நாடகக்கலையின் அதிபதியாக திகழ்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோவில்களில் மிகவும் உயர்ந்த வடிவங்களில் இருக்கும் சிலைகளில் நடராஜர் சிலையும் ஒன்றாகும். இது போன்ற சிவன் அவதாரம் எடுத்தார் என்று கேட்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது. தமிழ்நாட்டிற்கும் நடராஜர் சிலைக்கும் மிகவும் பெரிய தொடர்பு எப்போதுமே இருந்து கொண்டே தான் உள்ளது. சமீப காலங்களாக பல இடங்களிலிருந்து மண்ணை தோண்டும் பொழுது பல சிவலிங்கம் கிடைப்பது அடிக்கடி நடந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் இப்போது மண்ணைத் தோண்டும் பொழுது ஒரு நடராஜரின் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நிலத்தில் மண்ணைத் தோண்டும் வாகனத்தினால், மண் தூண்டும் பொழுது ஒரு இடத்தில் பாம்புகள் ஊறிக் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து மேலும் அந்த இடத்தில் மண்ணை தோண்ட ஆரம்பித்த பொழுது பாம்புகள் வெளியே வர ஆரம்பித்தன. தொடர்ந்து தோண்டிக்கொண்டே இருக்கும் பொழுது ஒரு நடராத்திரியின் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. எப்படி இவ்வளவு ஆழத்தில் இந்த நடராஜர் சிலை போனது என்று அங்கு இருக்கும் யாருக்கும் தெரியாமல் நின்றனர். ஆனால் அவ்வளவு ஆழத்தில் அந்த நடராஜர் சிலை இருந்தாலும் கூட மண்ணுக்கடியில் நுழைந்து அந்த பாம்புகள் நடராஜரை தரிசித்துக் கொண்டு, அவரின் பாதுகாப்பிற்கு அங்கேயே இருந்துள்ளது என்பதை பார்க்கும்போது மிகவும் வியப்பாகவே உள்ளது. இதுவே தற்போது இணையத்தில் வைரலாகி வருவதை பார்க்க முடிகிறது.