கருட புராணம் என்று ஒரு புராணம் இருப்பதை கேள்விப்பட்டது உண்டா?? கருட புராணத்தை பற்றி அதிர வைக்கும் உண்மைகள்!!கருட புராணம் என்பது இறந்த பிறகு உயிர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனைகள் பற்றிய ஒரு நூல் என்கின்ற அபிப்பிராயம் அனைவருக்கும் இருந்து உள்ளது. இந்த நூல் மரணத்தைப் பற்றி விரிவாக பேசுகிறது. கருட புராணத்தை படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தாலும் கூட அவற்றை மனிதர்கள் தங்களை வைத்து நினைத்துப் பார்க்கும்பொழுது மிகவும் பயமாகவும், யோசிக்க வைக்கும் ஒரு புராணமாகவும் உள்ளது. அதை படிப்பவர்கள் அனைவரும் அவர்கள் செய்த தவறுகளை நினைத்து, நான் இறந்த பிறகு இது போன்ற தண்டனைகள் எல்லாம் என் ஆன்மாவிற்கு கிடைக்குமா?? என்று நினைத்து மிகவும் அஞ்சுகின்றனர். இந்த கருட புராணம் என்பது 18 புராணங்களில் ஒன்றாகும். பகவான் விஷ்ணு, கருடரிடம் உபதேசம் செய்த ஒரு புராணம் தான் இந்த கருட புராணம் ஆகும்.
மனிதனின் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையை பற்றியது என்பது உண்மையே!! ஆனால் அதில் மரணத்திற்கு பின் நாம் செய்ய வேண்டியது என எதுவுமே கிடையாது வாழும் பொழுதே எப்படி வாழ வேண்டும் என்பதை காட்டும் ஒரு புராணமே கருட புராணம் ஆகும். உலகில் எல்லாவற்றிற்கும் ஆன விடையினை அறிவியல் கண்டுபிடிப்பு உள்ளது. ஆனால் மரணத்திற்குப் பிறகு ஏற்படும் வாழ்க்கை குறித்து எந்த ஒரு அறிவியலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து அதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டே தான் உள்ளது. மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டு திரும்பி அவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களே வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அவர்கள் அதிகமாக கூறிய பதில் என் உடலை விட்டு என் ஆன்மா பிரிந்து சென்று எனது உடலை நானே பார்ப்பது போன்று தோன்றியது இன்று அவர்கள் கூறினார்கள். மேலும் சிலர் இறந்து விட்டனர் என்று எண்ணி அவர்களை எரிப்பதற்கு கொண்டு போகும்போது கூட அவர்களுக்கு மீண்டும் உயிர் வந்து எழுந்த அற்புதங்களும் பல நடந்து உள்ளது.
மெய்ஞானமும், விஞ்ஞானமும் சந்தித்துக் கொள்கின்ற ஒரு இடம் தான் நம் சன்னாதனம்!! மேலை நாடுகளில் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றி எந்த ஒரு விரிவாக்கமும் இந்த அளவிற்கு இல்லை. ஆனால் நம் தர்மத்தில் உள்ளது என்று கேட்கும் போது மிகவும் வியப்பாகவே உள்ளது. மனிதன் இறந்தவுடன் உயிரானது அவனது உடலில் இருந்து எடுக்கப்பட்டு விடுகிறது. அவனின் ஆன்மாவானது உன் உடலை விட்டு வெளியே வந்தவுடன் தனது உடலை பார்க்கிறது. எமதூதர்கள் அந்த உயிரினை கவர்ந்து கொண்டு வேகமாக எமலோகம் செல்கின்றனர். எமலோகமானது பூமியில் இருந்து 80,000 காத தூரத்தில் உள்ளது என்று கருட புராணம் சொல்லுகின்றது. அங்கு எமனின் சன்னதிக்கு சென்றவுடன் எமன் இந்த உயிரை எங்கே எடுத்தீர்களோ அங்கேயே கொண்டு போய் விட்டு விடுங்கள் என்று கூறுகிறார். 13 நாட்கள் கழித்து மீண்டும் இந்த உயிரை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று எமன் கூறிய உடன் அந்த உயிர் மீண்டும் தனது உடலை தேடி வருகிறது. இவை அனைத்தும் மூன்று மணி நேரத்திற்குள் நடக்கும் மேலும் அந்த ஆன்மா மீண்டும் தாழ் உடலுக்குள் போவதற்கு முயற்சிக்கும். அதனால் தான் இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் அந்த உடலை எரிக்கவோ புதைக்கவே கூடாது என்ற சட்டமும் இன்றும் உள்ளது. இது போன்று பல கருத்துக்களை உள்ளடக்கி வாழும் பொழுது எப்படி வாழ வேண்டும் என்று இந்த கருட புராணம் விளக்குகிறது!! கருட புராணம் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடி படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என ஒரு ஆய்வு சொல்கிறது...