நேற்று நள்ளிரவு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அங்கு செந்தில் பாலாஜி கைது செய்யப்படும் அதே நேரத்தில் கன கச்சிதமாக ஒரே நொடியில் அடுத்தடுத்து தமிழகத்தில் அரங்கேறிய சம்பவம் வெளிவந்து ஆளும் திமுகவினரை மேலும் அதிர செய்து இருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு என நேற்று காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட தொடங்கினர்.சோதனையானது கரூர் மண்மங்கலம் ராமேஸ்வரபட்டியில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு,கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அசோக்குமார் வீடு,ராயனூர் பகுதியில் உள்ள மணி வீடு,வெங்கமேடு பகுதியில் சண்முகம் வீடு, ஈரோடு சாலையில் உள்ள ரமேஷ் பாபு வீடு,செங்குந்தபுரம் சதீஷ்குமார் ஆடிட்டர் அலுவலகம்,வேலாயுதம்பாளையம் கார்த்தி,
கரூரில் உள்ள ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் ஜூவல்லரி நகைக்கடை என எட்டு இடங்களில் சோதனை நடைபெற்றது,இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சோதனை தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக,துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் வேலாயபாளையம் கார்த்திக்,வெங்கமேடு சண்முகம்,ஈரோடு சாலையில் உள்ள ரமேஷ்பாபு வீடுகளிலும் அமலாக்கதுறையினர் சோதனை நிறைவு பெற்றது இங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாகவும் எந்த ஆவணங்களை அமலாக்க துறை எதிர் பார்த்ததோ அது கிடைத்ததாக கூறப்படுகிறது.அதை தொடர்ந்து அமைச்சர் வீடு,அவரது சகோதரர் அசோக்குமார் வீடு,ராயனூர் பகுதியில் உள்ள மணி வீடு,பழனி முருகன் ஜுவல்லரி,ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகம்,
கரூரில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது சரியாக நள்ளிரவு 1.10 மணிக்கு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்ற தகவல் உறவினருக்கு கொடுக்கப்பட அந்த நொடியே அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக கார் மூலம் கொண்டு செல்ல பட்டன.அடுத்த ஒரு சில நிமிடங்களில் கரூரில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. இதன் மூலம் செந்தில் பாலாஜியை அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்காக அமலாக்க துறை கைது செய்யவில்லை என்பதும் முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருக்கும் காரணத்திற்காக மட்டுமே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பது உறுதி என தெரியவந்து இருக்கிறது.
கடந்த இரண்டு வாரம் முன்னர் நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் தொடர் சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்ற பட்ட நிலையில் தற்போது செந்தில் பாலாஜியை கைது செய்ய கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜி முறைகேடு செய்த வழக்கு தான் முக்கிய காரணமாக அமலாக்க துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோட்டியா அமலாக்க துறையால் கைது செய்யபட்ட நிலையில் அவரது துணை முதல்வர் பதவியை இழந்தார் அதே போல் தற்போது செந்தில் பாலாஜியும் அமைச்சர் பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.