தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கும் சூழலில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்ற தகவலை அடுத்து பாதுகாப்பு பல படுத்தப்பட்டு இருக்கிறது, இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை சந்திக்க சென்றால் அவரது பதவிக்கே ஆபத்தாக முடியலாம் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை கொடுத்து இருக்கும் சூழலில் அடுத்த திருப்பம் அரங்கேறி இருக்கிறது.
மேலும் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்த இருவர் கைது செய்யப்படலாம் என்பதால் முதல்வர் தரப்பு கடும் அதிர்ச்சியில் இருக்கிறதாம்.கரூரில் மின்சாரம் மதுவிலக்கு ஆயா தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு அவர் சகோதரர் அசோக்குமார் வீடு நண்பர்கள் வீடு என நேற்று காலை எட்டு மணி அளவில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர்.
சோதனையானது பல்வேறு குழுக்களாக பிரிந்து மத்திய போலீஸ் பாதுகாப்பு படை உதவியுடன் சோதனை ஈடுபட்டனர்.நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டனர்அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு அளித்துள்ளார்.மேலும்,கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் டி ஐ ஜி சரவண சுந்தர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை இப்படி இருக்க செந்தில் பாலாஜிக்கு உதவிய அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது நண்பர்கள் என 7 பேர் கைது செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது இந்த சூழலில் செந்தில் பாலாஜி நண்பர்கள் பலர் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டு இருக்கிறார்களாம்.இதனை தடுக்கும் விதமாக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் அனுப்ப இருக்கிறதாம். தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கும் நிலையில் அரசு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டால் அது அரசிற்கு பெரும் பின்னடைவை உண்டாக்கும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல், சட்ட வல்லுநர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேல் ஆலோசனை நடத்துகிறாராம்.