24 special

உள்துறை அமைச்சகம் அனுப்பிய உத்தரவால் ஆடிப்போன செந்தில் பாலாஜி

Sylendrababu, senthil balaji
Sylendrababu, senthil balaji

ஒருபுறம் அமலாக்க துறை சார்பில் நடைபெறும் ரெய்டு செந்தில் பாலாஜி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் வேலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு போட்டு இருக்கும் உத்தரவு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் இரண்டு நாள்  கட்சி சார்பான பயணம் மேற்கொண்டார். கடந்த, 10ம் தேதி இரவு அமிட்ஷா சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.அப்போது, அங்கு மின்தடை ஏற்பட்டது. இது, 40 நிமிடங்களுக்குப் பிறகே சரி அது செய்யப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையை இன்று ஏற்படுத்தியுள்ளது.

முதலில் ஏதார்த்தமான மின்தடை என்று நினைத்து இருந்த சூழலில் தற்போது மின்தடை விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக எடுத்துள்ளது. வழக்கமாக, உள்துறை அமைச்சர் பயணத்துக்குப் பின், அவருடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, உள்துறை அதிகாரிகள் தணிக்கை செய்வர்.

இதன்படி நேற்று தணிக்கை நடந்தது. இதில், சென்னையில் அமித் ஷா இருந்தபோது ஏற்பட்ட மின்தடை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இது உள்துறை அமைச்சரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடாகவே மத்திய உள்துறை எடுத்துக் கொண்டுள்ளது.

நாட்டின் உள்துறை அமைச்சர் வரும் போது முக்கியமாக விமான நிலையங்களை ஒட்டிய பகுதியில் மின் தடை ஏற்படுகிறது என்றால் அது மிக பெரிய பாதுகாப்பு அச்சறுதலுக்கு உண்டான சவால் என பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.இந்த சூழலில் உள்துறை அமைச்சரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு   தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தமிழக தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் டி.ஜி.பி., சைலேந்திர பாபுவுக்கு உள்துறை கடிதம் எழுதியுள்ளது.

தற்போது இருவரும் உள்துறை அமைச்சகத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உண்டாகி இருக்கிறது, இது ஒருபுறம் என்றால் மின்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி, மத்திய உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு குறைபாட்டிற்கு செந்தில் பாலாஜி பொறுப்பு வகிக்கும் மின்துறையே காரணம் என கூறப்படுவதால் இதிலும் செந்தில் பாலாஜி தலை உருல தொடங்கி இருக்கிறது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரின் பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மீறப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டு இருக்கிறதாம்.