24 special

சென்னை அணியின் வெற்றியை கொண்டாடிய திரவிடியன்களுக்கு திடீர் ஷாக்

Chennai ipl 2023,mk stalin
Chennai ipl 2023,mk stalin

வெற்றி பெற்ற ஐபிஎல் கோப்பை தி நகர் பெருமாள் கோவிலுக்கு வருகை புரிந்த நிகழ்வு பலரின் வயிற்றில் நெருப்பை பற்றவைத்துள்ளது. கடந்த 55 நாட்களாக நடந்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரவையும் டிக்கெட்டுக்கு ஏங்க வைத்தது, மாலை ஆனால் தொலைக்காட்சி முன்பு கூட வைத்தது, மற்ற பொதுவெளிகளிலும், திரையரங்களிலும் காத்து வாங்கும் அளவிற்கு ஐபிஎல் இந்த கோடை விடுமுறையில் அனைவரையும் கட்டி போட்டது என்றே கூறலாம்.


ஐபிஎல் மேட்ச் இருக்குங்க என புது டிவி வாங்கியவர்களும் உண்டு, ஐபிஎல் மேட்சிற்காக வெளியூர் பயணத்தை ரத்து செய்தவர்களும் உண்டு, எங்கிருந்தாலும் ஐபிஎல் மேட்ச் காண வேண்டும் என்பதற்காக தனியாக டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்தவர்களும் உண்டு, இப்படி ஐபிஎல் வெறி பிடித்து கிரிக்கெட் போட்டிகளை காண குவிந்த ரசிகர்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஏராளம். 

தங்கள் மாநில அணி ஜெயிக்க வேண்டும், தங்கள் ஆதரவு பெற்ற கிரிக்கெட் அணி ஜெயிக்க வேண்டும், தங்களுக்கு பிடித்த கிரிக்கெட்டர் இருக்கும் அணி ஜெயிக்க வேண்டும் என பல்வேறு வேண்டுதல்கள், பல்வேறு பந்தயங்கள், பல்வேறு சண்டைகள், பல்வேறு சச்சரவுகள்  என இணையத்திலும் சரி இயல்பு வாழ்க்கையிலும் சரி நடந்துவந்தது. இப்படி கலகலப்பாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த ஒன்றரை மாத கால பொழுதை கழித்தனர்.

இப்படி நடந்து வந்த கிரிக்கெட் திருவிழா இறுதியில் குஜராத் மற்றும் சென்னை மோதும் இரு இருபோட்டிகளுடன் முடிவடைந்தது. இதில் கடைசி பந்து வரைக்கும் இந்த டீம் ஜெயிக்குமா? அந்த டீம் ஜெயிக்குமா? குஜராத் ஜெயிக்குமா?   சென்னை ஜெயிக்குமா? என இருக்கை நுனியில் அமர வைத்தது இந்த ஐபிஎல் தொடர். இறுதியில் குஜராத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ஆடிய சிஎஸ்கே அணி இறுதி பந்தில் நான்கு ரன்கள் அடித்து வெற்றியை குவித்தது. சிஎஸ்கே அணியின் ரவீந்தர் ஜடேஜா இறுதிவரை ஜெயிக்காது என கூறப்பட்ட அணியை கடைசி பந்தில் ஜெயிக்க வைத்தார். தோனியே கண்கலங்கி பார்க்கும் அளவிற்கு இருந்தது இந்த மேட்ச். 

இப்படி விறுவிறுப்பாக நடந்த கிரிக்கெட் தொடரை வழக்கம் போல திராவிட பின்புல திராவிடின் ஸ்டாக்க்குகள் அரசியலாக்க பார்த்தனர். அதாவது நடந்த கிரிக்கெட் தொடரை விளையாட்டாக பார்க்காமல் குஜராத் சென்னை என இரு அணிகளாக பிரித்து சென்னை என்பது திராவிடியன் மாடல் ஆட்சிஎன்றும், குஜராத் என்பது பாஜக ஆளு மாநிலம் என்றும் எனவே இந்த இறுதி போட்டி பாஜகவிற்கும், திராவிடியன் ஸ்டாக்குகளுக்கும் நடக்கும் மேட்ச் என்றெல்லாம் சமூக வலைதளத்தில் நேற்று இருந்தே இதற்கான பரபரப்புகள் மற்றும் விவாதங்கள் கிளம்ப துவங்கிவிட்டன. 

குறிப்பாக சென்னை ஜெயிச்சதை சென்னை அணி ஜெயித்ததாக பார்க்காமல் திராவிடியன் ஸ்டாக் ஆகிய நாங்கள் ஜெயித்து விட்டோம், எப்பொழுதும் தெரிந்து கொள்ளுங்கள் என்னதான் குஜராத் என இருந்தாலும் சென்னை தான் கிங், சென்னை தான் டாப்பு என்றெல்லாம் வெற்றி கோஷங்களை சமூக வலைதளத்தில் பரவ விட ஆரம்பித்தனர்  இதற்கெல்லாம் ஒரு படி மேலாக சென்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் ஜெயித்தது போன்ற உணர்வு என சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு சில திமுக ஆதரவு இணையதள பிரபலங்களும் கூற ஆரம்பித்தனர். 

இப்படி விளையாட்டு இறுதி போட்டி அரசியலாக மாறியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்று நேர்காணல் நடத்தியது. அந்த போட்டியிலும் குஜராத் அணி மற்றும் சென்னை அணி இடையே நடந்த இறுதிப்போட்டியை பற்றி கேட்கப்பட்டது அதற்கு அண்ணாமலை நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி ஒரு பதில் கூறினார். என்னதான் குஜராத் அணி தோற்று இருந்தாலும் சென்னை அணியை ஜெயிக்க வைத்த ரவீந்தர் ஜடேஜா ஒரு காரியகர்த்தா, அவர் ஒரு பாஜக கட்சியை சேர்ந்தவர் எனவே இந்த வெற்றி அனைவருக்குமானது. நாங்கள் விளையாட்டை விளையாட்டாக பார்க்கிறோம் அதில் அரசியல் புகுத்தினால் இப்படித்தான் நடக்கும் குஜராத்தை ஜெயித்திருந்தாலும் அதை ஜெயிக்க வைத்தவர் ஒரு பிஜேபி ஆள் என பேசியதும் பரபரப்பு ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் சென்னை டா! வெற்றி டா! திராவிடியன் ஸ்டாக் டா! நாங்கள் தான்டா எனக்கூறி வந்தவர்களுக்கு பேரிடியை CSK நிர்வாகம் இறக்கியுள்ளது. ஆம் வெற்றி பெற்ற கோப்பையை எடுத்துக்கொண்டு நேராக டி நகரில் உள்ள திருப்பதி பெருமாள் கோவில் சென்று பூஜையை முடித்துள்ளனர் சென்னை அணியின் உரிமையாளர்கள். என்னடா சென்னை என்றோம்! வெற்றி என்றோம்! இப்படி கடைசியாக கோப்பை பெருமாள் காலுக்கு அடியில் செல்கிறது? எல்லாவற்றிற்கும் சனாதன தர்மம் தான் என காரணம் கூறி நமக்கு பழக்கம் ஆயிற்றே ஆனால் இப்படி கோப்பையே சனாதனதர்மத்தின் காலடியில் போய் கிடக்கிறது என தற்போது திராவிடியன் ஸ்டாக் புலம்பல்கள் அதிகமாகி விட்டன.