24 special

முதல்வர் தமிழ்நாடு திரும்பியது அமைச்சரவையில் முக்கிய மாற்றம்..!செந்தில் பாலாஜிக்கு ஆப்பு

Anbilmahes,mk stalin
Anbilmahes,mk stalin

அமைச்சர் செந்தில் பாலாஜி வசமுள்ள டாஸ்மாக் விரைவில் வேறொரு இளம் அமைச்சர் கைக்கு மாற வாய்ப்புள்ளதாக வெளியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 26ம் தேதி முதல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதே சோசியல் மீடியா மற்றும் ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது. 


முதல்வர் மு.க.ஸ்டாலினின் குட் புக்கில இடம்பிடித்த செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழல் சர்ச்சையில் சிக்கி தற்போது ரெய்டு வரை வந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் உற்று நோக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் வருமான வரித்துறை கைப்பற்றும் முக்கிய ஆவணங்களை கொண்டு அமலாக்கத்துறை மூலம் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.ஆனால் செந்தில் பாலாஜியோ இதையெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ரெகுலரான அலுவல் மற்றும் கட்சிப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இருப்பினும் நேத்திலிருந்து அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் தகவல் அதிக கவனம் பெற்றுள்ளது. அதாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன தான் வெளிநாட்டு பயணத்தில் இருந்தாலும் மகன் உதயநிதி மூலமாக செந்தில் பாலாஜி ரெய்டு அப்டேட்கள் குறித்து கேட்டறிந்து வருகிறாராம். அதிமுக ஆட்சி காலத்தில் கூட டாஸ்மாக் குறித்து எவ்வித பிரச்சனையும் எழாத நிலையில், செந்தில் பாலாஜி வசமுள்ள டாஸ்மாக் தற்போது டெல்லி மது ஊழல் விவகாரம் அளவிற்கு பெரிதாக்கப்பட்டு வருவது முதல்வரின் சிறப்பு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஏற்கனவே முதல்வர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியதும் மீண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றத்தில் மூத்த அமைச்சர் ஒருவருடைய பெயர் மட்டுமே அடிபட்டு வந்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜியின் பெயரும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

அதாவது அவர் வசமுள்ள டாஸ்மாக் துறையை வேறொரு அமைச்சருக்கு மாற்றக் கூடும் என திமுக வட்டாரத்திலேயே பேச்சு கிளம்பியுள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தது முதலே முதல்வர் செந்தில் பாலாஜிக்கு அளித்து வரும் முக்கியத்துவம் சீனியர் அமைச்சர்கள் பலரையும் கடுப்பில் ஆழ்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

தற்போது முதல்வரின் அபிமானத்தைக் கவரவும், தமிழ்நாட்டிலேயே வருமானம் கொழிக்கும் டாஸ்மாக்கை தட்டித்தூக்கவும் பல அமைச்சர்கள் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அரசியல் வட்டாரத்தில் இருந்து கசிந்த தகவல்களின் படி, உதயநிதியின் நண்பரும், முதல்வரின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவருமான அமைச்சர் அன்றில் மகேஷ் வசமே டாஸ்மாக் ஒப்படைக்கப்பட வாய்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த செய்தி அரசியல் வட்டாரத்திலும், அறிவாலயத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தடுத்து நடக்கப்போவது என்ன என பொறுத்திருந்து பார்ப்போம்..