24 special

VSB கையில் இருந்த ஒரு ஆயுதமும் காலி…! கசிந்த தகவல்கள்...!

senthil balaji, rn ravi
senthil balaji, rn ravi

திமுகவின் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கைதாவதற்கு முன்பு  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு என்ற இரண்டு பேரும் முக்கிய பதவிகளை தன்னிடம் வைத்திருந்தார் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்ட பொழுதும் அவரிடம் பதவி பறிக்கப்படாமல் இருந்தது அதற்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் செந்தில் பாலாஜி வசம் இருக்கும் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரிடம் இருந்த இரண்டு துறைகள் மட்டுமே பறிக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராகவே அவர் தொடர்வார் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இதற்கு பல எதிர்ப்புகளும் வெளிவந்தது.


அதிலும் குறிப்பாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்பதை ஏற்க முடியாது என்றும் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்திருந்தார் ஆனால் ஆளுநரால் ஒரு அமைச்சரே பதவியில் இருந்து நீக்க முடியாது என்ற சர்ச்சையும் வெடித்து சில பரிசினைகளுக்கு பிறகு இந்த ஆணை வெளியிடப்படும் என ஆளுநர் வெளியிட்ட அறிக்கையை நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கான நீதிமன்றம் குறித்த அலைக்கழிப்பு ஏற்பட்டது அதற்குப் பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டதும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது ஆனால் செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திலிருந்து அவருக்கு சம்பந்தமில்லை என்பது போன்ற ஆதாரங்கள் இல்லை எனவும் அவர் குற்றமற்றவர் என்பதை இன்னும் நிரூபிக்கப்படவில்லை அதனால் இந்த ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் அவரது நீதிமன்ற காவலையும் நீட்டித்தார். அதன்படி நேற்று முன்தினம் இவரது நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில் காணொளி காட்சி வாயிலாக ஆஜரானார் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வருகின்ற இருபதாம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார். இப்படி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீடிக்கப்படுவது இது எட்டாவது முறையாகும். இந்த நிலையில் ஜாமீன் மனு மறக்கப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா இல்லாத அமைச்சர் பதவியும் பறிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. . அதாவது செந்தில் பாலாஜியின் உடல் நிலையை காரணம் காட்டி அவரின் தரப்பு ஜாமின் மனுவை நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளது அதுவும் மூளைக்குச் செல்லும் நரம்பில் பாதிப்பு என்பது போன்று கூற உள்ளதாகவும் பேசப்படுகிறது ஆனால் இது போன்ற காரணத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தால் அவர் எப்படி அமைச்சராக செயல்பட முடியும் என்ற ஒரு கேள்வியும் எழுமே! என்றும் தேர்தல் வேறு நெருங்கும் காரணத்தினால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி தூக்கபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளது..

மேலும் செந்தில் பாலாஜி கைவசம் இருக்கும் கவசம் அமைச்சர் பதவி தான் என அவரது குடும்பம் நினைப்பதாகவும் ஆனால் தற்பொழுது திமுக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி தூக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் இனி அவருக்கு பாதுகாப்பு இல்லை என செந்தில் பாலாஜி குடும்பம் கருதுவதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீனுக்கும் திமுக ஆளும் கட்சியாக இருந்தும் பெரிய அளவில் முயற்சிகள் செய்யவில்லை, அமைச்சர் பதவியும் தற்பொழுது பிடுங்கப்படுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் செந்தில் பாலாஜி குடும்பம் தவிர்த்து வருவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது..