கடந்த ஒன்பதாம் தேதி 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான துணை நிதிநிலை அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு இது குறித்த விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்றுள்ளது. அந்த விவாதத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசிற்கு 2022 ஜூன் 30-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு முறை முடிவுற்றதன் விளைவாக பெருமளவு வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய அரசின் நேரடி வரி விதிப்பில் தமிழகத்தின் பங்கு அதிகமாக உள்ளது என்றும் ஆனால் அந்த பங்களிப்பிற்கு ஏற்ற வரி பகிர்வினை நாம் பெறுகிறோமா என்பதை பார்த்தால் இல்லை என்றும் அதற்கு உதாரணமாக மத்திய அரசின் வரி வருவாய் என தமிழக அரசின் வரிவருவாயையும் ஒப்பிட்டு கூறியிருந்தார்.
மேலும் பாஜக ஆளக்கூடிய மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் தமிழகத்திற்கு குறைவான பங்களிப்பே கிடைக்கிறது என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இந்த பாணியில் வேறுவிதமாக திமுகவிற்கு புரியும் வகையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனியாக பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக ஆட்சியில் தான் தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ம்தேதி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, “2014 -15 முதல் 2021-22 வரை மத்திய அரசின் நேரடி வரியில், தமிழ்நாட்டின் பங்கு ரூ. 5.16 லட்சம். ஆனால், இந்த காலகட்டத்தில் மாநிலங்களுக்கான வரி பகிர்வாக தமிழ்நாட்டிற்கு கிடைத்தது ரூ. 2.08 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், உத்தரப்பிரதேசத்திற்கு அவர்களின் பங்களிப்பை விட அதிகமாக நிதி கிடைத்துள்ளது" என மத்திய அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இதே குற்றச்சாட்டை திமுக கூறி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதை பேசாத நாளே இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசை குறை கூறுவதையே திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு தானும் விதி விலக்கல்ல என்பதைத்தான் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேச்சும் அமைந்துள்ளது. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை' எனக்கூறிய வானதி சீனிவாசன் கூறிய ஒரு கருத்துதான் தற்போது திமுகவிற்கு வினையாக முடிந்துள்ளது.வானதி சீனிவாசன் வெளியிட்ட அந்த அறிக்கையில், 'தமிழ்நாட்டிலேயே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்துதான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. அந்த நிதியைத்தானே மற்ற மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இதைத்தானே மத்திய அரசும் செய்கிறது' என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் கொங்கு பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, காரணம் இதுவரை தமிழகம் அதிக வரியை தருகிறது ஏன் எங்களுக்கு கம்மியாக செய்கிறீர்கள் என திமுக கேள்வி எழுப்பி வந்ததை அப்படியே எடுத்து தமிழகத்தில் கொங்கு மண்டலம் அதிக வரியை தருகிறது ஆனால் ஏன் கொங்கு மண்டலத்திற்கு கம்மியாக செய்கிறீர்கள் என வானதி முன்வைத்த கேள்வியால் திமுக தலைமை திணறிபோயுள்ளது. காரணம் ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுக பின்தங்கியுள்ளது, மின் கட்டணம், சென்னிமலை விவகாரம் போன்ற விவகாரத்தினால் வேறு திமுகவிற்கு மேலும் பின்னடைவு இந்த நிலையில் கொங்கு மண்டலம் அதிக வரியை தருகிறது ஆனால் திமுக அரசு ஒன்றுமே செய்யவில்லை என்ற வானதியின் கருத்துவேறு சேர்ந்த காரணத்தினால் இனி ஒன்றுமில்லாமல் திமுக கொங்கு மண்டலத்தில் காத்து வாங்க போகிறது என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது....