உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது, முதலில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் பாகிஸ்தான் வீரர்கள் உறுதியாக ஆடினாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 191 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் சுருண்டது, குறிப்பாக இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒவ்வொரு முக்கியமான தருணங்களிலும் 'ஜெய் ஸ்ரீ ராம்', 'வந்தே மாதரம்' என அங்கிருந்த ரசிகர்கள் முழக்கம் எழுப்பினார்கள். பாகிஸ்தான் வீரர்கள் அவுட் ஆகும்போதும், அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போதும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷத்தினால் மைதானமே அதிர்ந்தது, ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷம் மட்டுமல்ல வந்தே மாதரம் கோஷமும் அவ்வப்போது இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த எழுப்பப்பட்டது.
மேலும் முக்கிய தருணமாக பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் ரிஷ்வான் 49 ரன்னில் அவுட் ஆகி ஃபெவிலியன் திரும்பிய பொழுது ஜெய் ஸ்ரீ ராம் என்றும் விளக்கம் விண்ணை அதிரும் அளவிற்கு அங்கிருந்த ரசிகர்களால் முழங்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது, இந்த நிலையில் இது தொடர்பான வீடியோவை பதிவு செய்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் 'விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது! விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும் விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும், விளையாட்டு வெறுப்பும் பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது' என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
வழக்கம்போல் எது நடந்தாலும் அதில் தன்னது கருத்தை கூற வேண்டும் என இப்படி கூறாதீர்கள் என உடனடியாக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக கூற வேண்டும் என்றால் இணைய தளத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல கிரிக்கெட் ரசிகர்கள் அதுவும் இந்திய தேசத்தை வெறித்தனமாக ரசிக்கும் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட துவங்கி விட்டனர், அவர்கள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இந்திய வீரர்களை அவமானப்படுத்திய பல நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு பதிவிட துவங்கிவிட்டனர், குறிப்பாக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தானை வீழ்த்தியதை தொடந்து பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணி வீரர்களை கிண்டல் செய்த சம்பவத்தை அதிக பேர் குறிப்பிட்டுள்ளனர். அப்பொழுது இந்திய அணியினர் பெவிலியன் திரும்பி கொண்டிருந்த சமயம் சேவாக்கை நோக்கி பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் 'இப்போது அப்பா யார்?' என கேட்டு வெறுப்பேற்றியுள்ளார்,
அப்பொழுது இந்திய வீரர் முகமது சாமி அவரை நோக்கி செல்லும் பொழுது தோனி அவரை சமாதானம் செய்தார், இந்த சம்பவத்தை அதிக கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பிட்டனர். இது மட்டுமல்லாமல் சென்னையில் டுப்லசிஸ் மேல் ஷூ வீசியதையம் குறிப்பிட்டுள்ளனர் மேலும் 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்த போது இந்திய வீரர்களை பார்த்து பாகிஸ்தான் ரசிகர்கள் உங்க அப்பன் யாரு என கூறிய வீடியோ வேறு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அது மட்டும் அல்லாமல் பழைய சம்பவங்களையும் வேறு கிரிக்கெட் ரசிகர்கள் நினைவு கூறுகின்றனர் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியன் கேப்டன் ஸ்ரீகாந்தை 1989 ஆம் ஆண்டு தாக்கிய சம்பவத்தையும் வேறு நினைவுகூர்ந்தனர், இப்படி பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீரர்களை அவமானப்படுத்திய பல்வேறு தருணங்களை நினைவுக்கு வந்து அப்பொழுதெல்லாம் 'உதயநிதி எங்கே சென்றார், ஏன் இந்தியாவிற்கு எதிராக பொங்க வேண்டும் என்றால் உதயநிதி முதல் ஆளாக வருகிறார் அதுவும் பாகிஸ்தான் என்றால் ஏன் இவ்வளவு ஆதங்கம் என்பது வேறு கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் உதயநிதி கூறியதை ஆமோதிக்கும் வகையில் யூட்யூபர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் இது தவறு எனக் கூறி பாகிஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கூறியுள்ளார், அதற்கும் வேறு இணையவாசிகள் பிரசாந்தை வச்சு செய்கின்றனர்! இது இன உணர்வு! நாட்டின் மேல் உள்ள அக்கறைதான் தான் இப்படி வெளிப்படுத்துகிறார்கள், இதுபோன்றுதான் ஏற்கனவே இலங்கை போட்டியின் பொழுதும் நடந்துள்ளது. அது மட்டுமல்லாமல் முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் எனக் கூறியதும் இதுபோல்தான், இப்படி இருக்கும் பொழுது பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீரர்களை அவமானப்படுத்திய போது எல்லாம் எங்கிருந்தீர்கள்? என்பதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி உள்ளனர். நேற்று நடந்த போட்டியை போட்டியாக பார்க்க வேண்டும் என பேசியதற்கு பல்வேறு கண்டனங்களும் எதிர்ப்புகளும் குவிந்து வருவதால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிவிட்டு வாயை கொடுத்து மாட்டிக் கொண்டோமோ என தற்போது திராவிட ஸ்டாக்குகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகின்றனர்.