இன்றளவில் அனைவரின் மத்தியிலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளின் பயன்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது. இது போன்ற செயல்களில் பொதுமக்கள் பலரும் அக்கவுண்ட்டை கிரியேட் செய்து அதில் அவர்கள் தினந்தோறும் ஒவ்வொரு வகையான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் சமையல் குறிப்பு, காமெடி சொல்வது, டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருவார்கள். மேலும் சிலர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் பல சமூக கருத்துக்களையும் கூறி வருவார்கள். இவ்வாறு சமூக கருத்துக்களை கூறும் பொழுது அவை சில நேரங்களில் சர்ச்சைக்கு உள்ளாகி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வரையிலும் சென்று விடுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இது போலவே பிரபல நடிகர் குறித்து பெண் ஒருவர் இணையத்தில் வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளார்!! அன்று முதல் அவருக்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் யார்?? அவர் எந்த நடிகர் குறித்து வீடியோவினை பதிவு செய்தார்?? மேலும் அதற்காக அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக காணலாம்!!
கோவை மாவட்டத்தில் உள்ள ஆர் எஸ் புறம் பகுதியில் வசித்து வரும் 44 வயதான விஷ்வ தர்ஷினி என்பவர் தனியார் youtube சேனல் ஒன்றிணை நடத்தி வந்துள்ளார். அது கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சிறுமி ஒருவரையும், நடிகர் விஷால் அவர்களையும் இணைத்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றினை பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ அச்சமயத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அச்சிறுமி சார்பாக அளிக்கப்பட்டிருந்த புகார் அடிப்படையில் இவரை சென்னை ராயப்பேட்டை போலீஸ் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு அதன் பிறகு ஜாமினில் வெளிவந்துள்ளார்.
அவ்வாறு ஜாமினில் வெளிவந்த பிறகு தனது youtube வீடியோவில் புழல் சிறை குறித்து தவறாக பேசியுள்ளார். இதனை தொடர்ந்து விசாரணைக்காக கோயம்புத்தூரில் உள்ள துடியலூர் காவல் நிலையத்திற்கு அழைத்த பொழுது அங்கு இருந்த பெண் போலீசார் ஒருவர் குறித்து அவதூறாக பேசியதாகவும், அதற்காக அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்ததாகவும் செய்திகள் பரவி வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது விஸ்வ தர்ஷினி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் பணத்தினை வாங்கி மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே அவர் மீது பெண் காவலரை அவதூறாக பேசிய வழக்கு இருந்து வரும் நிலையில் தற்போது அவதூறாக பேசிய வீடியோவும் வெளியாகி இருந்தது.
மேலும் மோசடி வழக்கும் தற்பொழுது எழுந்துள்ளதால் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் என ஏழு பிரிவுகளின் கீழ் இவரின் மீது வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விஷால் குறித்த வீடியோ ஒன்றினை பதிவு செய்து அதன் பிறகு தொடர்ந்து பல சர்ச்சைகளில் மாட்டி தற்பொழுது பணமோசடி வரை விஷ்வ தர்ஷினி மீது வழக்குகள் எழுந்த நிலையில் தற்பொழுது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது மட்டுமல்லாமல் தற்போது குண்டர் சட்டத்திலும் கைது செய்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.