80 களில் சினிமா என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்துள்ளது. மேலும் அனைவராலும் எளிதில் சென்று பார்க்க கூடியதாக இருந்ததில்லை! அதே சமயத்தில் தெருக்கூத்து மற்றும் நாடகங்களை அன்றைய காலத்தில் உள்ள மக்கள் அதிகமாக பார்த்து வந்துள்ளனர். அதோடு பொம்மலாட்டங்கள், பரதநாட்டிய நாட்டியங்கள், இசைக் கச்சேரிகள் போன்றவையும் அன்று அதிகமாக மக்களிடையே வரவேற்பை பெற்று வந்தது. அதற்குப் பிறகு சினிமாவின் மோகம் ஆனது அனைவரிடத்திலும் பறந்து சில முக்கிய நிகழ்வுகளின் பொழுது குடும்பமாக சென்று பார்த்து வருவார்கள். அதுவும் அந்த திரைப்படம் ஒரு திரையரங்குக்குள் ஒளிபரப்பப்பட்டதில்லை மண் தரையில் மண்களை குவித்து அதில் அமர்ந்து பார்த்திருப்பார்கள் இதனை இன்றும் நம்முடைய தாத்தா பாட்டிகள் இடம் கேட்டால் கூறுவார்கள். அதற்குப் பிறகு 80 - 90 களிலேயே சினிமா பார்க்கும் பழக்கம் பெரும்பாலான மக்களிடையே வந்துவிட்டது தொலைக்காட்சிகளும் வர சினிமா மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது சற்று அதிகமானது.
ஆனாலும் தெருவிற்கு ஒரு வீட்டில் மட்டுமே தொலைக்காட்சி இருக்கும் அல்லது ஒரு தெருவிற்கு ஒரு தொலைக்காட்சி என வாங்கி அதில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தெருவில அமர்ந்து பார்த்திருப்பார்கள். இந்த காலகட்டத்திற்கு பிறகு பல வீடுகளில் தொலைக்காட்சி வர ஆரம்பித்தது பல திரையரங்குகளுக்கு சொல்ல ஆரம்பித்தனர் திரையரங்குகளும் நாற்காலிகளுடன் காட்சிப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு 90 களின் இறுதி காலகட்டத்தில் சினிமாவே பலரது கனவாகவும் சினிமா பார்ப்பது பலரது பழக்கமாகவும் மாறிவிட்டது. 2000 களில் சினிமாவிற்கு என்று அதிக வரவேற்பு கிடைத்தது திரை நட்சத்திரங்கள் என அனைவருமே புகழின் உச்சிக்கே சென்றிருந்தனர். அன்று இருக்கும் காலத்தை தற்போது இருக்கும் காலத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அதிக வேறுபாடு இருப்பதை உணர முடியும் ஏனென்றால் அன்று ஒரு அரிதாக இருந்த திரையரங்கு மற்றும் சினிமா இன்று அனைவரது கையிலே வந்துவிட்டது ஏன் பலர் தன்னை தானே நடிகை நடிகர்களாக நினைத்து ஒரு படத்தில் வரும் ஒரு சீனை ரீகரியேட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்கள்.
அதாவது செல்போன் மற்றும் இன்டர்நெட் ஆதிக்கமானது இன்றைய இன்டர்நெட் உலகில் இருக்கத்தான் செய்யும் அதனால் பிறக்கும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மொபைல் போனில் தான் மூழ்கி இருக்கிறார்கள். அதே சமயத்தில் பலர் கவனத்தை ஈர்க்கவும் பல லைட்ஸ்களை வாங்க வேண்டும் என ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமான வீடியோக்களை பதிவிடுகிறார்கள். அப்படி பெரும்பாலானோர் ஒரு படத்தின் காட்சியை ரீ கிரியேட் செய்து வெளியிடுவதை செய்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் ரீரிலி செய்யப்பட்ட கில்லி திரைப்படத்தின் ரீகிரியேஷன் வீடியோக்கள் அனைத்துமே சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவியது. அதாவது திரிஷாவின் என்ட்ரி, விஜயின் என்ட்ரி, விஜய் மற்றும் திரிஷா இருவரும் இறுதி காட்சிகளை பேருந்துகளில் சென்று கொண்டிருக்கும் காட்சிகள், கலங்கரை விளக்கத்தின் மீது இருக்கும் காட்சிகள் என அனைத்தையும் பலர் ரிக் கிரியேஷன் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
அந்த வரிசையில் தற்போது ஒரு குடும்பமே ஒன்று சேர்ந்து கில்லி திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சியை ரீ கிரியேட் செய்து பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் லைக்ஸ்களையும் பெற்று வருகிறது. அதாவது விஜய், திரிஷாவை காப்பாற்றி விட்டு வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு ஒரு பிஸ்கட்டை காண்பித்து இந்த பிஸ்கட்டில் மயக்க மருந்து கலந்து அந்த வெள்ளி குடத்தை தூக்கி விட்டு சென்றுவிட்டார் என கூறும் அந்த காட்சியில் ஒட்டுமொத்த குடும்பமே காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்கள் அதேபோன்று இன்று ஒட்டுமொத்த குடும்பமே சேர்ந்து அதே கில்லி படத்தின் காட்சியை அச்சு அசலாக ரிக்ரியேட் செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சியை பார்க்கும் பொழுது அனைவரது நடிப்பிற்கும் பல பாராட்டுகள் குவிந்து வருகிறது.