பாஜக என்ற ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியுள்ளது. ஆரம்பத்திலிருந்து அக்கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் தனக்கான செல்வாக்கை பெற்று மக்களின் ஆதரவை பெற்று ஒவ்வொரு தொகுதியையும் கைப்பற்றி தற்போது பெரும்பான்மையான தொகுதிகளையும் கைப்பற்றி மத்தியில் ஆட்சி புரிந்து வருகிறது. அதோடு இந்த கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களும் சமமாகவும் அனைவருக்கும் சமமான அங்கீகாரமும் அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்பட்ட வருகிறது மேலும் இக்கட்சியின் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் மற்ற அரசியல் கட்சிகளில் இருப்பது போன்று ஒரு வாரிசு அரசியல் முறையை இக்கட்சியில் உள்ள எவரும் பின்பற்றுவதில்லை. அதனால்தான் ஒரு காலத்தில் தேநீர் விற்பவராக இருந்தவர் தற்போது பிரதமராக அக்கட்சியின் மூலம் உயர்ந்துள்ளார்.
மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் அவர்கள் முன்வைத்த பல நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அதனால் தற்பொழுது வட இந்தியாவில் பெரும்பான்மையான வாக்கை தன் பக்கம் வைத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி! இப்படி வட இந்தியா முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த பாரதிய ஜனதா கட்சியால் தென்னிந்திய பக்கம் குறிப்பாக தமிழகம் பக்கம் தனது செல்வாக்கை உயர்த்த முடியாமல் இருந்தது அப்பொழுதுதான் தமிழகத்தில் பாஜகவின் நிலைமையை மாற்றி தமிழக மக்களின் நலனுக்காக ஒரு மாற்று அரசியலை பாஜக கொடுக்க தமிழக மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ஒரு இளைஞரை மாநில தலைவராக பொறுப்பில் அமர வைத்தது. 2021 இல் இவர் மாநிலத் தலைவராக பொறுப்பேற்கப்பட்டார்.
அதற்குப் பிறகில் இருந்து தமிழகத்தில் பாஜகவின் நிலைமையை வேறு விதமாக மாறிவிட்டது திமுகவை எதிர்த்து ஒரு பிரதான எதிர்க்கட்சி போன்று பல கேள்விகளையும் திமுக ஆளும் கட்சி என்ற போர்வையில் செய்த ஊழல் நடவடிக்கைகள் திமுக மூத்த அமைச்சர்கள் செய்த ஊழல் நடவடிக்கைகளை ஒவ்வொன்றையும் புட்டு புட்டாக வெளிக்கொண்டுவந்து அதற்கான கேள்விகளையும் மக்கள் முன்பாக ஆதாரத்தோடு நிரூபித்து வந்தார் அண்ணாமலை. மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவர் முன்வைக்கும் சில கருத்துக்களும் காட்டும் சில ஆதாரங்களுமே பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் மையப்படுத்தி தமிழகம் முழுவதும் அண்ணாமலை மேற்கொண்டு என் மண் என் மக்கள் நடைபயணமானது மாபெரும் வெற்றியை கண்டுள்ளது தமிழகத்தின் திரும்பும் பக்கமெல்லாம் அண்ணாமலையின் யாத்திரையில் அவர் மக்களைக் கண்டு மக்களிடம் நேரடியாக உரையாடியது குறித்த பேச்சுகளே பரவலாக பேசப்பட்டது.
அதோடு பல பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி இளைஞர்கள் என அனைவருக்கும் தற்போது அண்ணாமலை ஒரு ஃபேவரிட் ஹீரோவாக மாறி வருகிறார். திமுகவில் இருந்து வந்த பல சீனியர் நிர்வாகிகளும் அண்ணாமலையின் பேச்சால் கவரப்பட்டு பாஜக பக்கம் திரும்பி வருகிறார்கள் சினிமாவின் பல நட்சத்திரங்களும் அண்ணாமலை மேற்கொள்ளும் சீரிய நடவடிக்கைகளால் பாஜக பக்கம் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஷால் திரைப்பட நிகழ்ச்சி மேடையில் கூறிய செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ரத்னம் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாணவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் கூறினார் விஷால், அந்த வகையில் மாணவர்கள் தரப்பில் ஒரே ஒரு சிம்பிளான கேள்வி கேட்கிறோம் ஓபிஎஸ் ஆ இபிஎஸ் ஆ? என்று அவர்கள் கேட்க அதற்கு விஷால் ஓபிஎஸ்ஸும் இல்லை இபிஎஸ்ஸும் இல்லை ஐபிஎஸ் தான் என்ற வகையில் பதில் அளித்தது தற்போது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.
ஏனென்றால் தற்போது ஐபிஎஸ் என்றாலே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் அனைவருக்கும் நினைவிற்கு வருகிறார் அந்த அளவிற்கு அவரது நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் வட்டாரம் மட்டும் இன்றி தமிழக முழுவதும் கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் விஷால் ஐபிஎஸ் என்று பதில் அளிக்க அவர் அண்ணாமலையை தான் கூறுகிறார் என்று அந்த அரங்கமே கரகோஷத்தில் எதிரொலித்ததும் இணையங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் விஷாலை தொலைபேசியில் அழைத்து 'என்ன மச்சி நீ இப்படி பேசலாமா? எலேக்ஷன் வருது பார்த்து பேசு...? என லேசாக மிரட்டும் தோனியில் உதயநிதி பேசியதாகவும் வேறு சில விஷயங்களை கசிய விடுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்...