24 special

நாம் தமிழருக்கு இணையாக களமிறங்கும் கர்நாடக கட்சி.. சீமானின் அடுத்த நகர்வு என்ன?

Seeman
Seeman

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிராந்திய கட்சிகள் தொடங்கி, தேசிய கட்சிகள் வரை கூட்டணிப்பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடுகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை தனித்து நிற்பதாக கூறி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் அவரது கட்சியின் விவசாயி சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தற்போது அந்த கட்சி தமிழகத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் சீமான் திரும்பும் இடமெல்லாம் செக் வைத்து வருகிறது.


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்காக 40 தொகுதிகளில் ஆண், பெண் என்று சரி சமமாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது. இப்படியான சூழ்நிலையில் தான் விவாயை சின்னத்தை கர்நாடக கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் சொந்தமில்லை அதனை காரணமாகவே தேர்தல் ஆணையம் வேறு கட்சிக்கு கொடுக்கப்பட்டது. இதனால் சீமானால் உரிமையை கோரா முடியாது என்று கூறியது.

மேலும், உங்களுக்கு இந்த சின்னம் வேண்டுமென்றால் முன்கூட்டிய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும். அப்போது தாமதம் செய்துவிட்டீர்கள். இப்போது கேட்டு என்ன பலன். அதோடு இந்த சின்னம் உங்களுக்கு ராசியான சின்னம் போலவும் தெரியவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலிருந்து சீமான் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறார். தனித்து போட்டியிட்டு வரும் சீமான் தற்ப்போது வரை ஒட்டு சதவீதமானது ஏழு வரை உயர்ந்துள்ளது.

இதுவரை நடந்த தேர்தலில் அக்கட்சி ஒரு முறைக்கூட சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்யதா கட்சி நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சீமானின் ஓட்டுக்கள் பிரியும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் கரும்பு விவசாயி சின்னமானது சீமான் உடையது என்று கிராமப்புறத்தில் உள்ள பலருக்கும் தெரியும். இப்போது சின்னம் அவருக்கு கொடுக்கவில்லை என்பது மக்களுக்கு முழுமையாக சென்றுள்ளதா இல்லை வேறு எந்த சின்னத்தில் சீமான் போட்டியிடவுள்ளார் என்பது குறித்து இதுவரை எந்த வித தகவலும் வெளியாகவில்லை.

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. மக்களவை தேர்தலுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குமாறு சீமான் மேல் முறையீடுசி செய்துள்ளார். மேல் முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. ஏற்கெனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்த நிலையில் இந்த மேல்முறையீடு செய்துள்ளார். உச்ச நீதிமன்றமும் அதே கருத்தை கூறி தேர்தல் ஆணையத்திடம் புதிய சின்னத்தை கொடுக்க அறிவுறுத்தும் என்று கூறுகின்றார் அரசியல் விமர்சகர்கள். புதிய சின்னம் பெற்று அதனை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.