தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து பல பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தற்பொழுது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் தோல்வியடைந்து விட்டது. மேலும் சமீபத்தில் கூட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆன எம் ஆர் விஜயபாஸ்கர் ரூபாய் 100 கோடி அளவு சொத்துக்களை அபகரித்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசாரிடம் விசாரிப்பதற்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைவராகி இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இதனால் பெரும் பரபரப்பு நிகழ்ந்து வந்தது. இதுபோன்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அதிமுகவிற்கு எதிராக தொடர்ந்து எழுந்து வருகிறது.
மேலும் அதிமுகவில் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் தற்பொழுது விக்ரபாண்டி இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில் தற்பொழுது அதனையும் புறக்கணிப்பதாக கூறியுள்ளனர். மீண்டும் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் ஏற்கனவே ஐந்தாக உடைந்து கிடக்கும் அதிமுக கட்சியானது மொத்தமாக அழிந்து விடும் என்றும், தற்போது இரட்டை இலைக்கு என்று இருக்கும் மரியாதையும் அதனுடைய பெயரும் அழிந்துவிட்டு தற்பொழுது இந்த கட்சியில் இருக்கும் அனைவருமே வேறொரு கட்சிக்கு தாவி விடுவார்கள் என்றும், அதனால் இதற்கு மேல் தோல்வியில் வேண்டாம் வெற்றியும் வேண்டாம் என்று நினைத்து அதனால் எந்த ஒரு போட்டிக்கும் போக வேண்டாம் என்று கூறி தற்பொழுது இந்த தேர்தலையும் புறக்கணித்துள்ளது. இப்படி ஏற்கனவே பின்னடைவுகளை சந்தித்து வரும் அதிமுக தற்பொழுது தொடர்ந்து அக்காசியில் உள்ள அமைச்சர்களால் இதுபோன்று விவகாரங்களில் மாட்டி மேலும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு விவகாரம் எழுந்து வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!! அது குறித்து விரிவாக காணலாம்.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் லஞ்சம் அளிக்கப்படும் தடைகளை மீறியும் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி துர்கா போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐ போலீஸ் அ வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஆறு அதிகாரிகள் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக சென்னையில் உள்ள சிபிசிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை தொடங்கியது. மேலும் இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான சி விஜயபாஸ்கர், பி வி ரமணா, டிஜிபி ராதா கிருஷ்ணன் மற்றும் ஆணையர் ஜார்ஜ் போன்ற மத்திய மாநில அரசுகளில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை சிபிஐ தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஜூலை எட்டாம் தேதி சிபிஐ நீதிமன்ற நீதிபதி எழில் வளவன் இது குறித்து விசாரணை நடத்தினார். இதில் மத்திய மாநில அளவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டு இருப்பதால் இந்த வழக்கினை விசாரணை செய்வதற்காக சென்னையில் உள்ள எம் பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் விசாரிக்கும் இடமான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதிக்கு இந்த வழக்கானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக மேலும் பின்னடைவை சந்திக்கும் என்று அரசியல் வட்டாரத்திலும், அரசியல் விமர்சகர்களில் கண்ணோட்டத்திலும் பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர் தோல்விகளை வேறு சந்தித்து வரும் அதிமுகவினர் இந்த வேகமெடுக்கும் வழக்குகள் காரணமாக இவர் எதுவும்செய்யமாட்டேன் என்கிறாரே, ஒரு போராட்டம் கூட நடத்தமாட்டேன் என்கிறாரே எனவும் கடுப்பில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.