தற்பொழுது தமிழகத்தில் மது போதை மற்றும் கஞ்சா போன்ற பழக்கங்களினால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தொடர்ந்து ஆங்காங்கே மது அருந்திவிட்டு சிலருக்கு உயிர் இழப்பு வரை ஏற்பட்டு வருகின்றது. சமீப காலமாக நடந்த கள்ளச்சாராயம் பிரச்சனைகளும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தமிழ்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இது போன்ற தீய பழக்கங்களுக்கு தற்பொழுது இளைஞர்கள் நாளுக்கு நாள் அடிமை ஆகுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் கூட தற்பொழுது இது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறும் நிலைமை தற்போது நிகழ்ந்து வருகிறது.
மேலும் இன்றைய காலங்களில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்ற அனைத்துலுமே மது விருந்து என்பது சாதாரணமான விஷயமாக மாறிவிடுகிறது. முதலில் அதிக அளவில் ஆண்கள் இதுபோன்ற புதிய பழக்கங்களுக்கு அடிமையாகி அவர்களின் குடும்பங்கள் கேள்வி குறையாக நின்ற நிலைமையில் தற்போது பெண்களும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி வருவது நடந்து வருகிறது. மேலும் இவற்றிற்கு ஏற்றது போல தற்பொழுது மது கடைகளில் எண்ணிக்கையும் தெருவிற்கு ஆங்காங்கே இருப்பது அதிகரித்து வருகிறது. இவ்வாறு மது கடைகளும் அதிகரித்துக் கொண்டே வருவதினால் அதனை மிகவும் சுலபமாக வாங்கி அருந்தி விடலாம் என்று மனநிலை குடிப்பழக்கம் உள்ளவர்களின் மனதில் வந்து விடுகிறது.
இன்றைய இளைஞர்கள் என்ன இடம் என்று கூட பார்க்காமல் தற்பொழுது பொது இடங்களில் கூட மது பாட்டில்களை வைத்துக்கொண்டு நினைக்கும் போதெல்லாம் மது அருந்திக்கொண்டு உள்ளனர். இவ்வாறு பொது இடங்களில் மது அருந்துவதினால் அதனை பார்க்கும் சிறு வயதில் உள்ளவர்களுக்கு இந்த பழக்கம் ஒரு சாதாரண வணக்கம் தான் என்ற மனநிலை வந்து விடுகிறது. இவ்வாறு பொது இடங்களில் மது அருந்துவது மட்டுமல்லாமல் சாலையில் சென்று கொண்டு இருப்பவர்களிடம் தகராறு செய்வது, மேலும் மது அருந்துவது போன்ற வீடியோக்களை எடுத்து இணையதளங்களில் பதிவிடுவது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். இதனை பார்க்கும் பலரும் மிகவும் கெத்தாக இருக்கிறது என்று தாங்களும் இதே போல செய்ய வேண்டும் என்று நினைத்து தவறான செயல்களில் ஈடுபட்டு வருவது தற்பொழுது நடந்து வருகிறது.
இன்றைய காலங்களில் மது அருந்துவது, கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் போன்ற தவறான பழக்கவழக்கங்கள் தற்போது தமிழகத்தில் அதிக அளவில் நடந்து வருவது தொடர்ந்து பார்க்க முடிகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு youtuber ம் பொதுவாக பேசுவது கிடையாது. ஒரு சில கட்சி சார்ந்த youtuber மட்டுமே இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் அரசியல் கருத்துக்களை கூறாமல் சாதாரண வீடியோக்களை மட்டுமே பதிவிட்டு வரும் youtuber ஒருவருக்கு இதுபோன்று மது பழக்கமுடையவரால் தற்பொழுது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் சாதாரணமாக youtuber அவர்களின் நண்பர்களுடன் பேசிக்கொண்டு செல்லும் பொழுது குடிபோதையில் ஒருவர் youtuber ன் கேமராவை பிடித்துக்கொண்டு கேமராவை கொடுக்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சாலையில் ஆட்டோவில் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் நபரிடமிருந்து கேமராவை பறித்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ஆனது சென்னை ரிச்சி சாலையில் பட்டப் பகலில் youtube இருக்கு இப்படி ஒரு நிலைமை நடந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசியில் இந்த வீடியோ இணையத்தில் வைரலான பிறகு அந்த சம்பவத்தில் குடிபோதையில் தகராறு செய்த புள்ளிங்கோவை காவல்துறை தட்டி தூக்கியதும் பரபரப்பாகியுள்ளது..