நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான திருவிழா கலைகட்டியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என்று 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. அரசியல் கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நான்கு முனை போட்டியாக களம் அமைந்துள்ளது. இதற்காக வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்து வேட்பாளர்களுக்கு சின்னம் மற்றும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், பாஜகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய சென்னையில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திறந்தவெளி வாகனத்திலும், சாலைகளில் நடந்தும் தாமரை சின்னதிக்கு வாக்களிக்க மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறார். மக்களும் அவருக்கு வரவேற்பு அளித்து கூட்டமாக கலந்து கொன்டு பிரச்சாரத்தை கவனித்து வருகின்றனர்.
இந்தசூழ்நிலையில், தனியார் சேனலுக்கு பேட்டியளித்த வினோஜ் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு சவால் விடுக்கும் விதமாக பேசியுள்ளார். அதில், மத்திய சென்னையில் இருக்கக்கூடிய மக்களின் துயரம் அவருக்கு தெரியுமா? வெள்ளம் வந்த போது மக்களை கண்டுகொள்ளவில்லை அதன் காரணமாகவே அவரை இந்த தொகுதியில் உள்ள மக்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. திமுக தொடர்பாக யார் ஒட்டு கேட்டு பந்தலும் அவர்களை புறக்கணித்து வருகின்றனர் என்றும் தமிழகத்தில் திமுக கட்சி தொடர்ந்து ஆட்சிக்கு வந்தும் மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. வரள்ச்சி என்பது ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்.
தயாநிதி மாறன் என்பவர் சாதாரண நபர் கிடையாது திமுகவின் வாரிசு அரசியல், மத்திய சென்னையில் திமுக கோட்டையாக மாற்றியுள்ளது. அதனை இந்த தேர்தலோடு மக்கள் புறக்கணிப்பார்கள் மக்கள் மறக்கவில்லை இன்னும் வெள்ளம், அதற்கான செயல்பாடுகள் மற்றும் 4000 கோடி ஊழல் செய்தது எதையும் மக்கள் மறக்கமாட்டார்கள் என்று கூறினார். இதனால் மக்கள் நிச்சயம் மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள் பாஜகவினரும் அதற்கு உழைத்து வருகின்றனர். இன்று பிரச்சாரத்தில் மக்கள் திமுகவினரை விரட்டியடிக்கும் நிலைமைக்கு வந்துள்ளனர் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, ஸ்டாலின் வசிக்கும் பகுதியான கோபாலபுரத்தில் திறந்தவெளி வாகனத்தின் மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வினோஜ் பி செல்வம், தனது இணைய பக்கத்தில் பதிவிட்டிருப்பது 'இங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்கினேன் என்றும், இங்கிருந்து வரலாற்றை மாற்றி எழுதுவோம், தமிழகத்தில் மாற்றத்திற்கான நேரம் என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய அவர் மக்களிடம் நேரடியாக களத்தில் வந்து பிரச்சனைகளை கேட்டு சந்திக்கும் எம்பியாக நான் இருப்பேன் என்றும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிக்கும் ஏற்படுத்தி தருவேன், என வாக்குறுதி கொடுத்தார்.
மேலும், தொகுதி மக்கள் மீது அக்கறையே இல்லாத மனிதராக இந்த தொகுதி எம்பி உள்ளார்.. முதலில் இந்த பகுதியில் எத்தனை வார்டு உள்ளது என்பது தெரியுமா..? என அவர்களது பகுதியில் சென்று தீவிரமாக வாகு சேகரித்த வினோஜ் பி செல்வத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மக்களும் பாஜக பக்கம் கவனம் செலுத்தி வருவதால் தமிழகத்தில் நிச்சயம் இந்த தேர்தலோடு மாற்றம் ஏற்படும் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
பிரதமார் மோடியும் தமிழகத்திற்கு 9 ம் தேதி வருகிறார் சென்னையில் உள்ள மூன்று மக்களவை தேர்தல் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார் பிரதமர் மோடி இதனால் திமுகவின் கோட்டை தகதப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது அரசியல் களமே பரபரப்பு அடைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.