காவேரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட அமைப்பினர், நேற்று கர்நாடக மாநிலம் முழுவதும் பந்த நடைபெற்றது. ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன் பெங்களுருவில் முழு அடுப்பில் ஈடுபட்ட அவர்கள், அது மட்டும் போதாதென்று மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்பில் ஈடுப்பட்டனர். இதனால் நேற்று பெங்களூரு நகர் முழுவதும் நேற்று இரவு 11.59 வரை அங்கு 144 தடை உத்தரவு அமலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று பந்த் நடைபெற்ற நிலையில், காவேரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் ஆணையத்தை வலியுறுத்திய நிலையில், அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. முன்னதாக 5ஆயிரம் கன அடி தண்ணீர் திர்க ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து மேல் முறையீடு செய்தது.
பின்னர் கர்நாடக அமைப்பினர் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்தை கொண்டு பாடை கட்டி, இறுதி சடங்கு செய்தனர் அப்பொழுதும் செவி சாய்க்காமல் இருந்தார் முதலமைச்சர்.கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவருடைய காட்சிகளை கண்ட ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினார்கள். ஆனால் இன்று தமிழகத்திற்கு காவேரி நீரை வழங்கக்கூடாது என்று நேற்று நடைபெற்ற போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இதனால் "உங்களை கொண்டாடினோமே தலைவா" என இணையத்தில் ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். தொடர்ந்து, நடிகர் பார்த்திபன் ஜெயிலரில் கிளப்பிய மாஷை விட நிஜத்திலும் தெறிக்க விட்டீர்கள் என்று நடிகர் சிவராஜ்குமாரை, பார்த்திபன் பாராட்டியுள்ளார்.
தமிழ் நடிகர் கர்நாடகாவில் தாக்கப்பட்டார்?தமிழ் நடிகர் சித்தார்த் நடித்து திரைக்கு வர விருக்கும் படம் "சித்தா" இந்த படத்தின் ப்ரோமோஷன் விழா கடந்த வியாழக்கிழமை அன்று பெங்களூருவில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் தீடிரென உள்ளே நுழைந்த கர்நாடக அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த்தை வெளியேறுமாறு முழக்கம் இட்டனர். தொடர்ந்து சித்தார்த் நன்றி தெரிவித்து மேடையில் இருந்து இறங்கி வெளியே சென்றார். இச்சம்பவம் தொடர்பான காணொலி சமூக தளத்தில் வைரலாக நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் " காவேரி நம்முடையதுதான் என கன்னடத்தில் பதிவிட்ட அவர், பல தசாப்தங்களாக இருக்கும் பிரச்சனையில் அரசியல்வாதிகளை விடுத்து சாமானியர்களை துன்புறுத்துவதா? என கேட்டிருந்தார். இதனால் பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகிறார் பிரகாஷ் ராஜ் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் விஜய் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் படத்தை திரையிட விடமாட்டோம் என ககர்நாடக அமைப்பினர் கருத்து தெரிவித்ததற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காவிரி நீர் விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பேசி ஒரு தீர்வு காண வேண்டும், இதற்கு நடிகர்கள் தாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கண்டம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, தமிழகத்திற்கு நீர் தரக்கூடாது என்று கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழகத்தின் முக்கிய இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். பிற அரசியல் தலைவர்கள் இதுவரை காவேரி நீர் விவகாரத்திற்கு வாய் திரக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.