திருமணத்துக்காக வங்கி லாக்கரில் சேர்த்து வைத்திருந்த, 18 லட்சம் ரூபாயை காணமல் போனதால் வாடிக்கையாளர் அதிர்ச்சி போலீசார் விசாரணை.உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த மொராதா பாத் மாவட்டத்தைச் சேர்ந்த அல்கா பதக் என்ற நபர் கடந்த 2022 ஆண்டு அக்டோபரில் பாங்க் ஆப் பரோடா வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்திருந்தார். தன் மகளின் திருமணத்துக்காக கூலி வேலை பார்த்து சிறுக சிறுக ரூ-18 லட்சம் ரூபாயை பணத்தை வங்கி கணக்கில் அவர் சேமித்து வைத்திருந்தார்.இதை தெடர்ந்து சமீபத்தில் வாடிக்கையாளர் அனைவருக்கும் பாங்க் அப் பரோடா குறுச்செய்தி அனுப்பியுள்ளது அதில் வங்கி கணக்கை புதுப்பிக்குமாறு கூறப்பட்டது.பின்னர் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு பகத் வாடிக்கையாளரை அழைத்தனர். இதன்படி வங்கிக்கு வந்த அவர் தன் லாக்கரை திறந்து பார்த்தார் அதிர்ச்சி அடைந்தார். அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த, 18 லட்சம் ரூபாய் ரொக்கம் கறையான்களால் அரிக்கப்பட்டதை பார்த்து மனமுடைந்து கதறி அழுதுள்ளார் இதை கண்டு வங்கி ஊழியர்களும் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றுள்ளனர்.
இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம் கோபத்துடன் அல்கா பதக் புகார் அளித்தார்.இந்த சம்பவம் குறித்து வங்கி தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்' என, வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.ரிசர்வ் வங்கியின் புதிய விதிப்படி, வங்கி லாக்கரில் பணத்தை வைப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.அதேபோல், பாங்க் ஆப் பரோடா வங்கியின் லாக்கர் ஒப்பந்தத்திலும், நகைகள், ஆவணங்கள் தவிர, லாக்கரில் ரூபாய் நோட்டுகளை வைக்கக் கூடாது என்றும், திருட்டு, கொள்ளை, தீ விபத்து போன்ற சம்பவங்களால் இழக்கும் பொருட்களுக்கு மட்டுமே வங்கி பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருந்த பணத்தை கரையான் அறித்ததால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.வீட்டுல வெச்சிருந்த தான் ஆட்டையை போடுராங்கனு வங்கிகளிலுமா என மீம்ஸ் மூலம் தெறிக்க விடுகின்றனர் இணையவாசிகள்.