24 special

அதிமுகவை உடைக்கிறது பாஜக..! முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம்!

sp velumani, annamalai
sp velumani, annamalai

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக உடனான கூட்டணியை அதிமுக சில நாட்களுக்கு முன்பு முறித்துக் கொண்டது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக  தெரிவித்தது.தற்போது தமிழக அரசியலில் பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க போகிறது என்ற கருத்து பொதுமக்களிடம் நிலவி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, அதிமுகவில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளரிடம் சந்தித்து : கடந்த ஒரு கால மாதமாக பாஜக தலைமையில் இருந்து எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருக்கின்றனர். நேரம் வரும்போது கூட்டணி குறித்து நிச்சயம் அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார். இதனால் பன்னீர்செல்வம், பாஜகவுடன் இணைவது உறுதியானது. ஓபிஎஸ் இணைந்தால் அவருடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டிடிவி தினகரன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே நாடாளுமன்றத் தேர்தலை பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.அதிமுக விலகியது குறித்து பாஜக தலைமை இதுவரை எந்த கருத்தும் கூறாமல் இருந்த நிலையில், நாளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார். கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது, எம்பி தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது உள்ளிட்ட விவகாரம் குறித்து அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி முறிவுக்கு பிறகு அண்ணாமலையின் டெல்லி பயணம், முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் களத்தில் பார்க்கப்படுகிறது.அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்களை பாஜக வசம் கொண்டுவர தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டதாக தகவல்கள் கசிந்தன. எடப்பாடி பழனிசாமி உடன் நெருங்கி இருப்பவர் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் எடப்பாடியுடன் நெருங்கியிருக்கும் நிலையில் இவர்களை பாஜகவில் இணைத்து அதிமுகவை எடப்பாடியிடமிருந்து உடைக்க வேலை நடைபெறுவதாக சில சர்ச்சைகள் எழுந்தன.

முன்னதாக மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பாவரின் அண்ணன் மகன் அஜித் பாவர் கட்சியை உடைத்து இரண்டாக பிரித்து 40 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தனர். அவருக்கு துணை முதல்வர் பதவியை பாஜக வழங்கியது. மகாராஷ்டிராவில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.இதேபோல் அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களை பாஜகவசம் இழுத்து அதிமுகவை உடைக்க திட்டம் தீட்டுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக அதிமுகவின் ஏகநாத் ஷிண்டேவாக எஸ் பி வேலுமணி செயல்படுவார் என சமூக தளத்தில் விமர்சிக்கப்பட்டார். இந்த சர்ச்சைக்கு  முற்று புள்ளி வைக்கவும், பதிலடி கொடுக்கும் விதமாக, எஸ்.பி வேலுமணி அவரது எக்ஸ் தளத்தில் ஆரம்ப காலகட்டத்தில் அதிமுக கொடியுடன் மிதிவண்டி பேரணியை நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு. #என்றென்றும்_அதிமுககாரன் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருப்பினும் அதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகள் வரும் காலகட்டத்தில் பாஜக பக்கம் இணைய போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.