நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது மிக பெரிய வெற்றியை பீஸ்ட் திரைப்படம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்படத்திற்கு போட்டியாக KGF- 2 அதே நாளில் வெளியாக இருப்பதால் பீஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தியேட்டர்களை முன் கூட்டியே புக் செய்யும் பணியில் இறங்கியுள்ளதாம்.
இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய் தரப்பு கடுமையான அதிருப்தியில் இருக்கிறதாம். அதற்கு காரணமாக கூறப்படுவது விஜய் இன்டெர்வியூ கொடுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அழுத்தம் காரணமாக பார்க்க படுகிறது, ஆடியோ லான்ச், ட்ரைலர் லான்ச் என கொடிகட்டி பறந்த விஜய்யை வளரும் நடிகர்கள் போன்று இன்டெர்வியூ கொடுக்க வைத்தது கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
மேலும் விஜய் சமீப காலமாக தளபதி என்ற பட்டத்தை பயன்படுத்தி வருகிறார் ஆனால் சேனலில் ஒளிபரப்பான PROMO வில் நெல்சன் கேள்விக்கு பதில் அளிக்கிறார் விஜய் என்று மட்டுமே போடப்பட்டு இருந்தது, இது மேலும் நடிகர் விஜய் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கேட்ட கால் சீட் கொடுத்தோம் ப்ரோமோஷன் கிடைத்தது ஏன் இப்போது இன்டெர்வியூ என கேட்டதற்கு படம் கூர்கா 2 என விமர்சனம் எழுவதால் படத்தின் கதை குறித்து விளக்கம் கொடுக்கும் வகையாக அமைய இன்டெர்வியூ தேவை என தயாரிப்பு நிறுவனம் கூறி இருக்கிறது.
வேறு வழியில்லாமல் விஜய் சம்மதிக்கும் நிலைக்கு சென்று இருக்கிறாராம், பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் தனது திரைப்படம் குறித்து பேட்டி கொடுத்து இருக்கிறார், தலைவா படம் வெளியாகிய போது அதற்கு முன்னர் பிரபுதேவா இயக்கத்தில் உருவான வில்லு திரைப்படம் போன்றவற்றின் பிரச்சனைகள் போது செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் விஜய்.
மேலும் தாய் தந்தை உறவில் சிக்கல்.. பொது வெளியில் தந்தை தாயை ஒதுக்கியதாக குற்றசாட்டு, ஒரு சார்பு அரசியல் பேசியதால் தற்போது வேறு யாரிடமும் தொடர்பில் செல்ல முடியாத நிலை இது தவிர்த்து மத்திய அரசு குறித்த விமர்சனம் திரைப்படத்தில் வைத்த நிலையில் அடுத்தடுத்து அரங்கேறிய ரைடு போன்ற பல காரணங்களால் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் விஜய்.
திரைப்படத்தில் அரசியல் பேசாமல் அமைதியாக பணியை செய்து இருந்தால் இன்று பேட்டி கொடுக்க வேண்டிய நிலை வந்திருக்காது என புலம்பி தவித்து வருகிறாராம் விஜய்.