
கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் கடுமையான ராணுவ மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பிராந்தியங்களில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக தலிபான் ராணுவம் பாகிஸ்தான் எல்லைத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஓடோடி ஒளிந்து கொண்டாரால் கொத்து கொத்தாக உயிரை விட்டனர்.
ஆப்கான் பாக்குடன் நீடித்த இந்த மோதலால் எல்லைப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது. நிலைமை மோசமடையாமல் இருக்க சவுதி அரேபியா, துருக்கி, கட்டார் போன்ற நாடுகள் நடுவேறி பேச்சுவார்த்தை நடத்தியன. இதன் மூலம் தற்காலிக சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகி, இரு தரப்பினரும் தங்களின் தாக்குதல்களை நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் மோதல் முடிந்த பிறகும் அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன.
இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப்,“ஆப்கானிஸ்தான், இந்தியாவின் மடியில் அமர்ந்து கொண்டு எங்களுக்கு எதிராக செயல்படுகிறது,”என்று குற்றம்சாட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த குற்றச்சாட்டால் பாகிஸ்தானின் அரசியல் திணறல் வெளிப்பட்டது. ஏனெனில், தன் நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகள், பொருளாதார சீர்கேடுகள் மற்றும் ராணுவ தோல்விகளை மறைக்கவே பாகிஸ்தான் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததாக பல நாடுகள் விமர்சித்தன.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் மவ்லாவி முகமது யாகூப் முஜாகித் மிகத் தெளிவாக மறுப்பு தெரிவித்தார் பாகிஸ்தானின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. எங்களது நிலப்பரப்பை எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துவதற்காகப் பயன்படுத்துவதில்லை.
ஆப்கானிஸ்தான் சுதந்திரமான நாடு. எங்கள் நலனுக்கேற்ப எந்த நாட்டுடனும் உறவு வலுப்படுத்துவோம்.
இந்தியா எங்களது நம்பிக்கைக்குரிய நண்பர்; அந்த உறவை மரியாதையுடன் தொடர்வோம்.”இந்தியாவை மதிக்கும் இந்த கருத்து, தலிபான் ஆட்சியில் உள்ள புதிய மாற்றத்தை உலகம் கவனித்தது.
ஆப்கானிஸ்தானில் இந்தியா பல ஆண்டுகளாக வளர்ச்சி பணிகளை செய்துள்ளது — பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், அணைகள், மின் நிலையங்கள் என பல துறைகளில் இந்திய உதவி எட்டியுள்ளது.இதனால் ஆப்கன் மக்களிடையே இந்தியா மீதான பாசமும் நம்பிக்கையும் உறுதியாக இருக்கிறது.
பாகிஸ்தான் தனது அரசியல் சிக்கல்களை மறைக்க “இந்தியா எதிரி” என்ற பழைய தந்திரத்தை தொடர்ந்தாலும், நிஜத்தில் ஆப்கனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் கொண்டது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை உலக அரங்கில் மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ளது.உலக வல்லரசு நாடுகள் முதல் ஆப்ரிக்கா வரை, ஆசியாவின் பல நாடுகள் வரை இந்தியாவை நம்பிக்கையுடன் அணுகுகின்றன.இப்போது தலிபான் அரசும் “இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவோம்” என வெளிப்படையாகச் சொல்லியிருப்பது, மோடி அரசின் வெளிநாட்டு திறமைக்கு கிடைத்த நேரடி பாராட்டாகும். மேலும் இன்றைய சூழலில் ஆப்கானிஸ்தான் – இந்தியா உறவு வலுப்படுவது, தென்னாசிய பிராந்தியத்தின்புதிய சக்தியாக பார்க்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றிய பிறகு இந்தியா தூதரகங்களை மூடியது. தற்போது 4 ஆண்டுகளுக்கு மீண்டும் காபூலில் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.