இலங்கை சுற்றுப்பயணம் முடித்து கொண்டு தமிழகம் திரும்பிய அண்ணாமலை தருமைபுரம் ஆதினம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் இந்த நிலையில் விரைவில் தருமை ஆதினத்தின் பட்டினம் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து விவகாரத்திற்கு முற்று புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கோவில்கள் வழிபாட்டிற்கு தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தது கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் டாஸ்மாக் போன்ற அத்தியாவசியமற்ற கடைகள் திறந்த பின்பும் கோவில்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை.
இதனை எதிர்த்து அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார் வழிபாட்டு தளங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து அனுமதி அளிக்கவில்லை என்றால் கடும் பின்விளைவுகளை ஆளும் திமுக சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார், இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுகவினருக்கு யாரும் எச்சரிக்கை கொடுக்க முடியாது.
நாங்கள் களத்தில் இறங்கினால் அண்ணாமலை நடமாட முடியாது என தெரிவித்தார் பதிலுக்கு அண்ணாமலை சவாலுக்கு தயார் என பேச விவகாரம் பெரிய அளவில் வெடித்தது இந்த சூழலில் திடீர் என வழிபாட்டு தளங்களுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு.
இது அண்ணாமலையின் கோவில் குறித்த முதல் வெற்றி அடுத்தது தற்போது தர்மபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து கோட்டாச்சியார் உத்தரவு பிறப்பித்துள்ளார் இது கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வேலையில் அண்ணாமலை இது குறித்து எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார் அதில்
தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம்கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார்.
தமிழக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார், தருமை ஆதினம் விவகாரம் பொது மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறி இருப்பதால் விரைவில் தருமை ஆதினம் பட்டினம் பிரவேசம் மிக பெரிய அளவில் திமுகவிற்கு எதிராக முடியும் சூழல் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அண்ணாமலையிடம் கடந்த ஆண்டு வழிபாட்டு தளங்கள் திறப்பு விவகாரத்தில் சிக்கிய திமுக, இப்போது தருமை ஆதினம் விவாகரத்திலும் அண்ணாமலையிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.