24 special

ஏர்போர்ட் மூர்த்தி கைது!. மூடி வைத்த அத்தனை தகவலும் வெளியாகி அதிர்ச்சி! வசமாக சிக்கிய திமுக அரசு

MKSTALIN,AIRPORTMOORTHY
MKSTALIN,AIRPORTMOORTHY

புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ‘ஏர்போர்ட்' மூர்த்தி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் இவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினார்கள். சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவுவாயில் அருகே நின்றுக்கொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து தாக்கினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தடுக்க முயன்றும் பலன் இல்லை. இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தியும் தன்னை தற்காத்து கொள்ள முயன்றார். 


பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ‘ஏர்போர்ட்' மூர்த்தி, “திருமாவளவனின் பட்டியலின சமூக விரோத போக்கை நான் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். திருமாவளவன் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று நான் 2 முறை போலீசில் புகார் அளித்தேன். அதற்கு போலீசார், நிலைமை சரியில்லை, நீங்கள் பார்த்து இருந்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். திருமாவளவன் லுங்கி கட்டிக் கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு பெசன்ட் நகருக்கு ஆட்டோவில் தனியாக வருவது எனக்கு தெரியும். என் வீடு பெசன்ட் நகரில்தான் இருக்கிறது. எனவே இந்த போக்கை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்த சூழலில் ஏர்போர்ட் மூர்த்தி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், எங்கள் கட்சியினர் மீது ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் 2 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். எனவே ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் கைது செய்ய வேண்டியது சென்னை டிஜிபி அலுவலக வாசலில்ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய திருமாவளவன் கட்சிகாரர்களை தான்.  அதற்கு வீடியோ சாட்சி உள்ளது அனைத்து ஊடகங்களிலும் என்ன நடந்தது என ஒளிபரப்பினார்கள். ஆனால் தற்போது பொய் வழக்கு போட்டு பாதிக்கப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை கைது செய்துள்ளது ஸ்டாலின்  அரசு.! 

ஏற்கனவே திமுக ஆளும் தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, கடந்த ஆண்டு தான் தமிழ்நாட்டின் முக்கிய தலித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் சொந்த தொகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார், இந்நிலையில்  ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பாதுகாப்பு தர வேண்டிய போலீஸ், திமுகவின் பேச்சைக் கேட்டு பாதிக்கப்பட்டவர் மீதே பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது. என்ற குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. 

ஒருவரும் குறை சொல்ல முடியாது ஆட்சி எதுன்னா, அது நம்பர் ஒன் முதலமைச்சர் ஆட்சி தான்.

இதற்கு பின் முக்கியகாரணம் ஒன்று தெரிய வந்துள்ளது. திமுக ஆட்சி வந்த பிறகு பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.வேங்கைவயல்,நாங்குநேரி,திருச்சி, ஆம்ஸ்ட்ராங் கொலை என அடுக்கி கொண்டே போகலாம்.இதற்கு எல்லாம் தோழமை சுட்டல் என ஒரே வார்த்தையில் கண்டனம் தெரிவித்து விடுவார் திருமா. பட்டியலின  தலைவர் என்றால் அது திருமாவளவன் மட்டுமே என்று தொடர்ந்து காட்டுகிறது. வேறு எவரும் வளரக்கூடாது.அது ஆம்ஸ்ட்ராங் ஆக இருந்தாலும் மூர்த்தி ஆக இருந்தாலும் முடியாது. திமுக சொல்வதை கேட்கும் நபர் தான் பட்டியலின தலைவர் என திமுக முடிவெடுத்து திருமாவை இயக்கிவருகிறது.  இல்லையென்றால் கட்சியை துண்டு துண்டாக்கிவிடும்.