வருகின்ற பிப்ரவரி ஒன்பதாம் தேதி சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பல நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியாகியுள்ள படம் லால் சலாம்! இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் நடிகைகளாக தான்யா மற்றும் அனந்திகா சனில்குமார் நடித்துள்ளனர். அதைவிட மிக முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தை இசை வெளியீட்டு விழா நடைபெற்றது அதில் பேசிய படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த சில நாட்களாகவே என் அப்பாவை சங்கி என்று கூறுகிறார்கள் சங்கி என்றால் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் உள்ளவர்களை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுவதாக நான் அறிந்தேன்! என் அப்பாவை சங்கினு சொல்லும்போது கோபம் வருகிறது இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது ஒருவேளை அவர் சங்கியாக இருந்திருந்தால் இந்த படத்தில் அவர் நடித்திருக்க மாட்டார் ஏனென்றால் இது மனிதநேயம் மிக்க உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே நடிக்கும் கூடிய ஒரு கதாபாத்திரம், அப்படிப்பட்ட ஒருவரால் மட்டுமே இதில் நடிக்க முடியும் என்று கூறி தனது தந்தையை சங்கி என்று கூப்பிட கூடாது எனவும் தெரிவித்தார். இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த பேச்சிற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் சங்கி என்ற வார்த்தை பெருமளவில் வைரலானது மேலும் விவாத பொருளாகவும் மாறியதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது அரசியல் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில், லால் சலாம் - நடிகர்களின் பின்னணி: என குறிப்பிட்டு அப்படத்தில் நடிகையாக நடித்துள்ள தான்யா பாலகிருஷ்ணன், பெங்களூரில் வசிப்பவர். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற சில தமிழ்ப்படங்களில் நடித்தார். வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு முன்பு CSK vs RCB அணிகளுக்கு இடையே நடந்த IPL போட்டி பற்றி இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அது இதுதான் "தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து, அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால்.... தருகிறோம்"! ...இந்த பதிவிற்காக இவருக்கு எதிராக HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனதால்... கடுப்பான இவர் 'இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்' என சபதம் போட்டார். சரி இப்போது இதை சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறீர்களா? லால் சலாம் படத்தின் கதாநாயகியே இவர்தான்.
எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தலைவரை சங்கி இல்லையென்று கூறிய ஐஸ்வர்யா... இதற்கு என்ன பதில் கூறுவார்?சினிமா ரசிகர்களே... உங்கள் வேலை... இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது மட்டுமே. மற்றபடி வேறு எந்த கேள்வியும் கேட்காதீர்கள். எஞ்சாய்.என்று பதிவிட்டு நடிகை தான்யா முன்பு தமிழக மக்களை குறித்து முன்பு விமர்சித்து பதிவிட்டதற்கு ஆதாரம் அளிப்பதாக ஒரு செய்தி லிங்கையும் இணைத்துள்ளார். மேலும் லால் சலாம் திரைப்படம் மனிதநேயமிக்க திரைப்படம் மத நல்லினத்திற்கான திரைப்படம் என்று கூறிவிட்டு அந்த திரைப்படத்தில் தமிழர்களை மிகவும் இழிவாக பேசிய ஒருவரை நடிகையாக ஐஸ்வர்யா போட்டிருப்பது அவருக்கே வினையாக அமைந்துள்ளது, இதன் காரணமாக லால் சலாம் படம் வெளியாகும் சமயத்தில் நிச்சயம் இந்த விவகாரம் வெடிக்கும் அதன் காரணமாக படமே வெளியாவதில் சிக்கல் இருக்கும் எனவும் வேறு சில விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.