Cinema

லோகேஷ் கனகராஜ் என்ன பெரிய இயக்குனரா..?

lokesh kanagaraj, tarun gopi
lokesh kanagaraj, tarun gopi

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கியவர் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் வரிசையில் இவரும் ஒருவர். சினிமாவிற்கு முன்னாடி வங்கியில் வேலை பார்த்து வந்த லோகேஷ் சினிமா மீது ஆர்வத்தால் வெளியில் வந்த அவர் சினிமாவில் தன்னை யார் என்று அடையாளப்படுத்தி கொண்டார். இவர் மீது பிரபல இயக்குனர் ஒருவர் மரியாதை இல்லாமல் பேசி உள்ளது சர்ச்சையாக மாறியுள்ளது.


மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அந்த படம் பெரியதாக பேசப்படவில்லை. மாநகரம் படம் வெளியான போது குறைவான திரையரங்கு மட்டுமே கிடைத்தது, முதல் படம் வெற்றி படமாக இருந்தது. ஆனால் பெரியதாக பேசப்படடவில்லை லோகேஷ் கனகராஜ் குறித்தும் யாருக்கும் தெரியவில்லை. அதன் பிறகு நடிகர் கார்த்தியை கொண்டு கைதி படம் எடுத்தும் தான் யார் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபித்தார். முழுக்க முழுக்க இரவு நேரத்தை கொண்டும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்டும் எடுத்த படம். விஜயின் பிகில் படத்துக்கு டப் கொடுத்தது கைதி படம் இந்த படத்துக்கு    பிறகு தான் மாநகரம் என்ற படம் அனைவர்க்கும் தெரிய வந்தது.

அதை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற மற்றுமொரு ப்ளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். இப்படி அவர் எடுத்த லியோ வரைக்கும் வெற்றி பாதைகளாகவே லோகேஷுக்கு அமைந்தது. அடுத்ததாக ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க இருக்கிறார் லோகேஷ். ஒரு பக்கம் இவரின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாமல் லோகேஷ் எடுக்கின்ற படம் எல்லாம் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாகவும் இளைஞர்களை சீர்கெடுக்கும் விதமாக இஇருப்பதாக சிலர் கூறினர்.

இந்நிலையில், பிரபல இயக்குனரும் நடிகருமான தருண் கோபி லோகேஷின் வளர்ச்சியை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது அதென்ன எல்லாரும் லோகி லோகினு சொல்றீங்க? எனக்கு அவனுக்கும் ஒரே வயசுதான். என்ன நான் 24 வயதிலேயே இயக்குனராகி விட்டேன். அவன் கொஞ்சம் லேட்டா வந்திருக்கான் அவ்ளோதான் என தன் ஆதங்கத்தை கூறினார். என்னை படம் பண்ண விடமாட்டிக்கிறாங்க அப்ப எடுத்த படத்தை வச்சு ரொம்ப நாளா இந்த சினிமாவில் இருக்கிறவர்னு சொல்றாங்க. 

ஆனால் எனக்கும் லோகேஷுக்கு ஒரே வயசுதான். திமிரு இரண்டாம் பாகம் சென்சாரில் பெயர் வைக்கக்கூடாது என்று கூறுகின்றனர்.  எங்க போனாலும் காரி துப்புறானுங்க. திமிரு 2 படத்திற்கு கூட அந்த பெயரை வைக்கக் கூடாதுனு பிரச்சினை பண்றாங்க’ என மேலும் தருண் கோபி கூறினார். நான் எடுத்த படத்தில் சில நல்ல உள்ளங்கள் கொண்டவர்கள் நடிகர்களிடம் கோபி தருண் கோபியுடன் படத்தில் நடிக்க வேண்டாம் என கூறியதாக எனக்கே சிலர் கூறினர்.

அதாவது திமிரு பட வெற்றிக்கு பிறகு தருண் கோபி எந்தவொரு படத்தையும் சரிவர கொடுக்கவில்லை. அவருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளாம். பேட்டி கொடுக்க வரும் போது மது குடித்துவிட்டு வந்து பேசுகிறார் என்றெல்லாம் பொய் சொல்லி அவர் பெயரை கெடுத்து வருகிறார்களாம். அடுத்ததாக திமிரு 2 படத்தை எடுக்க இருக்கிறாராம். அந்தப் படத்தில் என்னை வேறொரு ரூபத்தில் பார்க்க போகிறீர்கள் என சவால் விட்ட மாதிரி கூறினார். தருண் கோபி மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.