தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு பணி காலியாக உள்ளதை நிரப்பப்படும் எனும் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். இதெல்லாம் சாதனையா என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிக்கு டிஎன்பிசி தேர்வு மூலம் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக ஸ்டாலின் பணி அனைத்தையும் வழங்கினார். மேலும் காலியாக உள்ள இடங்களும் நிரப்பப்படும் என அறிவிப்பை வெளியிட்டார். இதனை விமர்சிக்கும் வகையில் பாமகவின் தலைவர் அன்புமணி "இதெல்லாம் சாதனையா' திமுக ஆட்சி 5 லட்சம் பேருக்கு அரசு வேலை என தேர்தலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது சிலருக்கு மட்டும் அரசாணையை தந்துள்ளனர்.கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் 50,000 மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் அந்தந்த பகுதியில் அரசு பணிக்கான ஆள் பற்றாக்குறையால் அரசு அலுவலக பணிகள் அனைத்தும் மந்தமாகவே செயல்பட்டு வருகிறது.
எந்தத் துறையிலும் புதிதாக பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. தற்போது 22,781 பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்கியுள்ள ஸ்டாலின் பொது மக்களிடையே சாதனை ஆட்சி என புகழாரம் சூட்டிக் கொள்கிறார்.தமிழகத்தில் திமுக இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்து அரசு காலியிடங்களுக்கான பணி அணை வழங்கப்படாமல் தேர்ச்சி பெற்றவர்கள் அழக்கலிக்கப்படுவதும் இங்கு நடந்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் பணிக்கான ஆணை வேண்டி 2000 மேற்பட்டவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் குளத்தூர் தொகுதியில் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவ்வாறு இருக்கையில் மேலும் 5 லட்சம் பேருக்கு அரசு பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் பொது மேடையில் பேசி வருகிறார். இதனை நம்பி தமிழக இளைஞர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்து வருகின்றது. மற்றொருபுறம் அரசு வேலை என்ற பெயரில் சிலர் இளைஞர்களை ஏமாற்றி பணம் பிடுங்கும் வேலையிலும் திமுக அரசியல் பிரமுகர்கள் இறங்கியுள்ளனர் என காட்டமாக கூறியுள்ளார்.