24 special

தேதி குறிச்சாச்சு...! உதயநிதி விவகாரத்தில் கடமையை செய்யப்போகும் சட்டம்...! ப்ச் இவ்ளோ சீக்கிரமாகவா?

udayanithi, high court
udayanithi, high court

செப்டம்பர் இரண்டாம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது அந்த மாநாட்டில் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாட்டில் உரையாற்றினார். அந்த உரையாடலில் சனாதனத்திற்கு எதிரான கருத்துகளையும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களை குறித்து மிகவும் இழிவாக பேசியிருந்தார். அதாவது மலேரியா டெங்கு கொரோனா போன்ற நோய்களை ஒழிப்பது போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும். இதற்கு ஏற்றவாறு நீங்கள் வைத்திருந்த மாநாட்டின் தலைப்பே என்னை மிகவும் ஈர்க்கிறது என்று பாராட்டி சனாதனத்திற்கு எதிரான சில கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தார். இதற்காக தமிழகத்தில் பாஜக தரப்பினர் பல கண்டனங்களை தெரிவித்தனர். சனாதனம் என்பது இந்து மதத்தின் ஒரு நம்பிக்கை அதனை எப்படி அமைச்சர்கள் இழிவாக பேச முடியும் என்று கேள்விகள் முன் வைக்க அதற்கு உதயநிதி ஸ்டாலினும் சனாதனம் வேறு இந்து மதம் வேறு என்று பிரித்து சமாளித்தாலும் அவர்கள் தரப்பிலே அதாவது மாநில அரசின் வழிகாட்டுதல்படி வெளியிடப்பட்டுள்ள 12 ஆம் வகுப்பு புத்தகத்தில் இந்து மதத்தின் வேறு பெயர் தான் சனாதன தர்மம் என்று குறிப்பிடப்பட்டிருந்த வாக்கியங்கள் மேற்கோள் காட்டப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலானது. 


இதனை அடுத்து தமிழகத்தை தவிர அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான கண்டனங்கள் வட இந்தியா முழுவதும் வெடித்தது. அதுமட்டுமல்லாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்குகளும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ ராசா எம்பி சனாதனம் என்பது எய்ட்ஸ் நோயை போன்றது அது உலக சமூகத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது என்று பேசினார். இதனால்  இவருக்கு எதிரான கண்டனங்களும் வலுப்பெற்றது. இதனை அடுத்து சனாதன தர்மம் குறித்து எதிராக பேசிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டது. இதனால் உச்ச நீதிமன்றமும் இது குறித்து விளக்கம் அளிக்க கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பெலா எம் திரிவேதி ஆகியோர் அமர்வு முன்பு உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் வினித் ஜிண்டல் தாக்கல் செய்த உதயநிதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. 

இந்த விசாரணையில் தமிழக அரசு தரப்பிற்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ஆனந்த் திவாரி ஆஜராகி இந்தியா முழுவதும் தற்போது பதியப்பட்டிருக்கும் வழக்குகளை போல 40 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது மேலும் இது போன்ற மற்றொரு வழக்கிற்கு உச்ச நீதிமன்றமே உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆதலால் வழக்கறிஞர் வினித் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்ய கூறினார். இதனை அடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜ் கிஷோர் சத்ரி இனப்படுகொலை செய்ய வேண்டும் என தமிழக அரசே அழைப்பு விடுத்ததாக தெரிவிக்க தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதனை மறுத்து எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியாக இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் சனாதனம் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் தொடரப்பட்டுள்ள நான்கு வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க முடிவு செய்து, தற்போது இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளனர். இப்படி நான்கு வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்பட்டு உதயநிதிக்கு எதிராக தீர்ப்பு வரும்பட்சத்தில் உதயநிதி ஸ்டாலின் தான் வகிக்கும் அமைச்சர் பொறுப்பை இழக்க நேரிடும் எனவும் அல்லது மேலும் அவர் தேர்தலில் போட்டியிட சில ஆண்டுகளுக்கு தடை விதிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.