24 special

சமயம் பார்த்து வசமாக திமுகவை கோர்த்துவிட்ட திருமா...! பல வருட கனவா...?

mk stalin, thirumavalavan
mk stalin, thirumavalavan

கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகாரில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதாவது நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் பாரதிய ஜனதாவின் கூட்டணியில் இருந்த பொழுது கோரிக்கையாக முன் வைத்திருந்தார். இதற்கு மத்திய அரசு எஸ்டி, எஸ்சி பிரிவை சேர்ந்தவர்களை தவிர மற்ற சாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவதாக இல்லை என்ற வகையில் தெரிவித்தது. இதனால் பீகார் மாநிலத்தில் மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதல் மந்திர நிதீஷ் குமார் கடந்த ஆண்டு முடிவு செய்தார். அதன்படி தற்போது அந்த கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த கணக்கெடுப்பின் முடிவுகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்ததோடு இதே போன்ற ஒரு கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். 


அதாவது இது குறித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இப்பொழுது வெளியாகி உள்ளன. மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் 36 % பிற்படுத்தப்பட்டோர் 27 % பட்டியல் சமூகத்தவர் 20% பழங்குடியினர் 1.6 % இருப்பது தெரியவந்துள்ளது. பொதுப் பிரிவினர் 15.5 % மட்டுமே இருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்போது பீகாரில் பட்டியல் சமூகத்திற்கு 16 % பழங்குடியினருக்கு 1% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 12% பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 63 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்டோர் 30 சதவீத இடத்தை மட்டுமே இப்போது பெறுகின்றனர். 15.5% உள்ள பொதுப் பிரிவினர் 50% இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்களைப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இது மாபெரும் சமூக அநீதியாகும். ஆதலால் பீகார் மாநில அரசு மேற்கொண்டதைப் போலவே தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப 21% ஆக உயர்த்த வேண்டும். பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பதைப் போல எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும்; தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும்  தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னணியில் திமுக அரசு தற்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று கூறினாலும் அதனை நடத்துவதற்கு திமுக அரசு தயாராக  இல்லை எனவும், இப்படி திமுக அரசு தயாராக இல்லாத நிலையில் திமுக அரசை வசமாக சிக்க வைக்கும் விதத்தில் திருமாவளவன் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை திமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.ஏற்கனவே இது போன்று தான் நடக்கவிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 25 வது ஆண்டு விழாவில் திருமாவளவன் சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறி ஏற்கனவே சனாதன விவகாரத்தில் சிக்கலில் இருக்கும் திமுகவை அழைத்துள்ளார். அதோடு தற்பொழுது ஜாதிவாரி கணக்கெடுப்பில் திமுகவை கோர்த்துவிட்டு உள்ளார், நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க திமுகவை திருமாவளவன் வசமாக சிக்க வைக்கும் வகையில் இது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.