வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசார் அவர் பிரசாத் ரெட்டியை அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். கைது செய்த அவரை தற்பொழுது சிறையில் அடைத்துள்ளதால் அவரை ஜாமீன் எடுக்க பாஜக வழக்கறிஞர் அணி முயன்று வருகிறது.
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை வரும் நவம்பர் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்பொழுது அமர் பிரசாத் ரெட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது புகார் எழுந்திருந்தது, அந்த புகாரில் தற்பொழுது சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
அதேபோல் வள்ளுவர் கோட்டத்தில் பாஜக நடத்திய போராட்டத்தின் போது போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்வதாக பதியப்பட்ட வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசாரால் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி ஆஜரான உடன் அவரை நவம்பர் பத்தாம் தேதி வரை அதாவது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாக இருக்கும் ஆள் கிடையாது அவர் ஒரு கட்சியின் பொறுப்பில் இருக்கும் மாநில அளவிலான தலைவர் ஏன் அவரை இப்படி எல்லாம் துரத்தி கைது செய்ய வேண்டும் என சில அரசியல் தலைவர்களிடமும் அரசியல் விமர்சர்களிடம் பேசிய பொழுது பல்வேறு விதமான தகவல்கள் கசிந்தன.
அதாவது அண்ணாமலை தற்பொழுது நடத்தும் 'என் மண் என் மக்கள்' என்ற யாத்திரையின் ஒருங்கிணைப்பாளர் தான் இந்த அமர் பிரசாத் ரெட்டிதான், இவரது ஒருங்கிணைப்பால்தான் தமிழ்நாடு முழுவதும் யாத்திரை நடந்து வருகிறது. ராமேஸ்வரத்தில் யாத்திரை துவங்கப்பட்டதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பில் இருந்தே யாத்திரை எங்கெங்கு செல்ல வேண்டும்? எந்த வழிகளில் எல்லாம் யாத்திரை சென்றால் எல்லா தொகுதிகளும் கவர் செய்ய முடியும் என திட்ட பணிகளை ஒரு குழுவாக அமைத்து ஒருங்கிணைத்து அதனை திறம்பட செய்து வந்தவர்தான் இந்த அமர் பிரசாத் ரெட்டி, இப்படி தொடர்ச்சியாக அமர் பிரசாத் ரெட்டி யாத்திரையில் போட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்று குறிப்பாக பெருமளவில் மக்களை கவர் செய்தது மட்டுமல்லாமல் யாத்திரை பெரும் அளவில் வெற்றி அடைந்தது ஆளும் திமுக அரசுக்கு தற்பொழுது பின்னடைவாக பார்க்கப்படுகிறது என தகவல்கள் கிடைத்துள்ளது.
இது மட்டுமில்லாமல் யாத்திரை முடியும் தருணம் ஜனவரி மாசம் இதிலிருந்து அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் வர விருப்பதால் கண்டிப்பாக யாத்திரையின் விளைவுகள் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும் எனவும், இப்பொழுதே யாத்திரையில் மக்கள் அனைவரும் திமுக அரசின் மீது கோபத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அண்ணாமலையின் அரசியல் நன்றாக இருக்கிறது என இளைஞர்களில் இருந்து முதியவர்கள் வரை கூறி வருகின்றனர். அதனால் யாத்திரையின் வெற்றி ஆளும் தரப்பை உறுத்தியுள்ளது, அதன் காரணமாகத்தான் இந்த விவகாரம் நடந்துள்ளது என தகவல்களை கசிய விடுகின்றனர் சில பாஜகவினர்.
தற்பொழுது அமர் கைது செய்திருப்பதற்கு பின்னணி இந்த யாத்திரையின் வெற்றிதான் ஏதாவது செய்து யாத்திரையை நிறுத்தி விட வேண்டும். அதுதான் தற்பொழுது ஆளும் அரசின் குறிக்கோளாக இருக்கிறது எனவும் வேறு கூறுகின்றனர். ஆனால் அமர் பிரசாத் ரெட்டி இல்லை என்றாலும் யாத்திரை சிறப்பாக நடப்பதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டு தான் தற்பொழுது சிறைக்கு சென்றிருக்கிறார் என தகவல்களை தெரிவிக்கின்றனர் சில பாஜக முக்கிய நிர்வாகிகள். சிறையில் இருந்தாலும் யாத்திரையில் அமர் செய்யும் சம்பவங்கள் ஆளும் தரப்பிற்கு தலைவலியைத்தான் ஏற்படுத்துகின்றன.