24 special

பசும்பொன்னிற்கு எடப்பாடி வரக்கூடாது.....எதிர்ப்பு தெரிவித்த சட்ட கல்லூரி மாணவர்கள்!

edapadi
edapadi

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா இன்று தொடங்கியது. 30ம் தேதி குருபூஜை விழாவில் பங்கேற்க அரசியல் தலைவர்கள் மும்முரம் காட்டி வருகிறன்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க கூடாது என்று அம்மாவட்ட கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆண்டு தோறும் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் ஜெயந்திக்கு அரசியல் தலைவர்கள் பங்கேற்று முக்குலோத்தோரின் வாக்குகளை பெறுவதற்கு மும்முரம் காட்டுவார்கள்.


அந்த வகையில் இந்த ஆண்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது, ராமநாதபுர மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைத்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், நாங்கள் இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வருகிறோம். கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் 20 சதவீதத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டார். 

மேற்கண்ட அரசாணையால் மிகவும் பிற்படுத்தப்பட்ட 118 சாதிகளும்  68  சீர்மரபினர் சாதிகளும் பெரிதும் பாதிப்படைந்தனர். மேற்படி அரசாணையினால் முக்குலத்தோரில் கள்ளர் மற்றும் மறவர் சமுதாயத்தினர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேற்கண்ட அரசாணையினை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் வருகின்ற 30.10.2023-ம் தேதியன்று இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேசிய தலைவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை நடைபெறவுள்ளது.

அந்நிகழ்ச்சியில் முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள். மேற்படி நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வருகிறது.மேற்கண்ட அரசாணையினால் பாதிப்படைந்த முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கும் அவ்வரசாணையினை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கும் இடையே மோதல்கள் வர வாய்ப்புள்ளது. ஆகவே அமைதியான முறையில் தேசிய தலைவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை நடைபெற மேற்படி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 30.10.2023-ம் தேதியன்று அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜையில் கலந்து கொள்ள அனுமதி அளிக்காமல் சட்டம்-ஒழுங்கினை பாதுகாத்து அமைதியான முறையில் குருபூஜை நடத்தி தருமாறு தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருபூஜையின் பொது அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டு முக்குலத்தோர் ஆதரவு தெரிவிப்பார்கள். தற்போது ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் தனித்து செயல்பட்டு வருகிறார். எனவே ஓபிஎஸ்க்கு தான் முக்குலத்தோர் ஆதரவு தெரிவித்து வருவதாக கூ வருகின்றனர். இந்த ஆண்டு குரு பூஜையில் பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வர் என்ற அறிவிப்பு வெளியானது. மேலும் ஓபிஎஸ்,அண்ணாமலை ஆகியோர் ஒன்றாக பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.