அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வழக்குகளில் தலையிட்டு விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சத்தியேந்தர் ஜெயின் ஆகியோரை கைது செய்தது. இது மட்டுமல்லாமல் அடுத்தபடியாக தமிழகத்தில் மணல் விவகாரம் மற்றும் அமைச்சர் பொன்முடி விவகாரம் ஆகியவற்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்னும் வேகம் காண்பித்து வருகின்றனர்.
இந்த பரபரப்புக்கெல்லாம் அடுத்தபடியாக அமலாக்கத்துறை வேறு ஒரு சில பட்டியலை கையில் வைத்துக்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் மட்டுமல்லாது வேறு சில அமைச்சர்களும் சிக்குவார்கள் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அமலாக்கத்துறை தனது முதற்பட்டியலை முடித்துவிட்டு அடுத்த பட்டியலை குறிவைத்து இறங்கிவிட்டது.
அதன் முதல் பகுதியாக மேற்குவங்க மாநிலத்தை அமலாக்கத்துறை தற்போது குறிவைத்து விசாரணை நடத்தியது, அந்த வகையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்பிரியா மல்லிக் இவர் இதற்கு முன்பு உணவுத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது உணவுப் பொருள்கள் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது, இதனை அடுத்து பல கோடி ரூபாய் மோசடி என அமலாக்கத்துறை பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கை வைத்து நேற்று முன்தினம் காலை அமைச்சர் ஜோதிப்பிரியா மல்லிக்கு கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள சொந்தமான வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கண்டது.
இது மட்டுமல்லாமல் அவரது உதவியாளர் உள்ளிட்ட எட்டு பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது, ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜோதிப்பிரியா மல்லிக்கிற்க்கு நெருக்கமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை அமைச்சர் ஜோதிப்பிரியா மல்லிக்கை நேற்று காவல்துறை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது செய்தியாளர்களிடம் ஜோதிப்பிரியா மல்லிக் பேசும்போது 'மிகப்பெரிய சதிக்கு நான் பலிகேடா ஆகிவிட்டேன்' என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நெருங்க நெருங்க அமலாக்கத்துறை இதுபோன்ற நடவடிக்கைகளில் இன்னும் விரைவாக ஈடுபடும் ஏற்கனவே உள்ள வழக்குகளை முடிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தீவிரமாக இறங்கி உள்ளதும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளும் விரைவில் நடந்தேறலாம் அதுவும் தீபாவளிக்கு முன்பே இன்னும் சில தலைகள் குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய சில தலைகள் கைதாகலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.இது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது, தமிழகத்தை எடுத்துக் கொண்டால் ஏற்கனவே செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார்! ஆனால் அமலாக்கத்துறை ரேடாரில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி, அமைச்சர் துறைமுருகன், அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் இருப்பதாக தெரிகிறது.
இப்படி அடுத்த கட்ட பட்டியலை எடுத்துக் கொண்டு அமலாக்கத்துறை தற்பொழுது கைது நடவடிக்கை வரை இறங்கி இருப்பது மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அமலாக்கத்துறை வசம் சிக்கிய அரசியல் புள்ளிகளுக்கு பேரிடியாக அமைந்து விட்டது, முன்பெல்லாம் சோதனைக்கு தான் செல்வார்கள் இப்பொழுது சோதனை முடிந்து கைது செய்கிறார்கள், ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு அப்படித்தான் நடக்கிறது எனவே இனி சோதனை வந்தாலே அது நமக்கு மிகப்பெரிய சோதனை தான் பல்வேறு அரசியல் தலைவர்கள் புலம்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.