
தேர்தல் நெருங்க நெருங்க திமுக அரசு பாஜகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்களை பழி வாங்கும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக பாஜகவை சேர்ந்த மத்திய குழுவே தமிழகம் வந்து கூறி சென்ற வேலையில் அதை அப்பட்டமாக நிரூபணம் செய்யும் வகையில் வெளியாகி இருக்கிறது அமர் பிரசாத் ரெட்டி வீடியோ.அமர்பிரசாத் ரெட்டியை பல்வேறு வழக்குகளில் தொடர்ச்சியாக கைது செய்துவரும் தமிழக காவல்துறை தென்காசியில் போலீசாரை யாத்திரையின் போது பணி செய்யவிடவில்லை என 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதற்காக நேற்று அமர்பிரசாத் ரெட்டியை புழல் சிறையில் இருந்து நேரடியாக போலீஸ் வாகனத்தில் அம்பாசமுத்திரம் அழைத்து செல்லாமல், மாறாக கிரிமினல் கைதிகளை போல அரசு பேருந்தில் அழைத்து வந்தனர்.முறையான சாப்பாடு இன்றியும் உடை மாற்ற கூட அனுமதி வழங்காமல் அமரை தொடர்ச்சியாக காவல்துறை பழி வாங்கிய நிலையில் தற்போது அவரை வீதி வீதியாக அரசு பேருந்தில் பாதுகாப்பு இன்றி அழைத்து வந்து மேலும் ஒரு பழி வாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு இருப்பது தற்போது பாஜகவினரை கொதிப்படைய செய்து இருக்கிறது.
ஒரு பக்கம் அமர் பிரசாத் ரெட்டியை வெளியில் கொண்டுவர சட்ட போராட்டம் நடக்கும் அதே நேரத்தில் தற்போது திமுக அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவும் ஆடு புலி ஆட்டத்தை தீவிர படுத்தி இருக்கிறதாம்.என் மண் என் மக்கள் யாத்திரையின் இணை பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்து அவரை தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளை போட்டு திமுக பழி வாங்கும் நடவடிக்கை போல் இல்லாமல் திமுகவின் ஆணி வேறாக இருந்து பாஜக தலைவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து பழி வாங்கும் நடவடிக்கைக்கு உதவும் IPS ஆஃபீசர் முதல் அமலாக்கதுறை விசாரணையை எதிர் கொள்ளும் இந்நாள் முன்னாள் அமைச்சர்கள் வரை வரும் நாட்களில் மிக பெரிய பதிலடியை கொடுக்க பாஜக தயாராகி விட்டதாம்.
அமரை சிறையில் வைத்து திமுக தனது மாநில அரசின் அசுர பலத்தை காட்ட ஒவ்வொன்றாக செய்து வரும் நிலையில் இனியும் திமுகவிற்கு அதே பாணியில் பதிலடி கொடுத்தால் மட்டுமே பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் முக்கிய குடும்பத்திற்கு புத்தி வரும் என காய்களை நகர்த்த தொடங்கி இருக்கிறதாம் பாஜக.சிறை செல்வதற்கு முன்னர் தமிழக பாஜகவினர் மத்தியில் மட்டும் பிரபலமாக இருந்த அமர் பிரசாத் ரெட்டி தற்போது இந்திய அளவில் பாஜகவினர் மத்தியிலும் பாஜக நிர்வாகிகள் மத்தியிலும் தற்போது பிரபலமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.