தமிழகத்தில் 80க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடத்தில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனையை கையில் எடுத்தனர். இதனால் திமுக முக்கிய தலைகள் பயந்து ஒழிந்து வருகின்றனர். கடந்த 2 மாதமாகவே தமிழக முக்கிய அமைச்சர்களின் வீட்டிற்கு டெல்லி தலைமை தீபாவளி பரிசாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாக திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் இவருக்கு சொந்தமான கரூர் மணல் இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்தது.
அதனால் துரைமுருகன் தான் அடுத்த ஸ்கெட்ச் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.இந்நிலையில் அமைச்சர் துரைமுருகனும் வெளியில் தலை காட்டாமல் ஆவணகளை எல்லாம் பதுக்க ஆரம்பித்தார். முதல்வரும் சில கண்டிஷன் துரைமுருகனுக்கு கொடுத்ததால் செல்லும் இடமெல்லாம் மௌனம் காத்து வந்தார். எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை திடீரென்று பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் காரை எடுத்தனர்.
காலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமான நிறுவனம், மருத்துவமனை ஆகிய இடத்தில் ரெய்டு ஆரம்பித்தனர். இதனால் பெரும் பதற்றமும் தொலைக்காட்சிகளிலும் சமூக தளத்திலும் தலைப்பு செய்திகளாக பேசப்பட்டு வருகிறது.இதற்கிடையில் ஒரு பரபரப்பு தகவல் வந்துள்ளது. அதாவது, திமுக முக்கிய தலைகளை கொஞ்சம் இடைவெளிவிட்டு அடிக்கலாம். இப்பொது அதிமுக தலைகள் மீது காய் வைக்கலாம் என்று டெல்லி தலைமை முடிவு எடுத்ததாம். அந்த வகையில் இன்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வீட்டில் ரெய்டு நடதத் உத்தரவு வந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாகவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு அதிமுக முக்கிய புள்ளிகளின் ஊழலை கையில் எடுக்க ஆளுநர் ரவிக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டது. அதாவது, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி ஆகியோரது வழக்கை விசாரணை செய்ய ஆளுநருக்கு திமுக அமைச்சர் கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு டெல்லி தலைமையின் பச்சை கொடி காட்டியதால் அவர்கள் மீது உள்ள வழக்கு மீண்டும் விசாரணை எடுத்து சிக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போது டெல்லி தலைமை முன்னாள் அமைச்சர்கள் வேண்டாம், முன்னாள் முதல்வர் மீது உள்ள ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம் என்று திட்டம் போடு இன்று முதல் ஆரம்பிக்கலாம் என்று எண்ணியது. திடீரென்று திமுக அமைச்சர் பக்கம் சென்று அவரை முடித்துவிட்டு அதிமுக பக்கம் திரும்பலாம் என்று தெரிகிறது. நாடாளுமனற்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதம் உள்ள நிலையில் அதிமுக மீது கைவைத்தால் நிச்சயம் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று பாஜக தலைமை நினைத்து வருகிறது.அதனால் தான் திமுக மீது தொடர்ந்து ஐடி ரெய்டு தொடங்கி வருவது குறிப்பிடத்க்கது.மேலும், இன்று அதிமுக பொது செயலாளருக்கு வருமான வரித்துறை வருவது தெரிந்து அதனை எதிர்கொள்ள தாயராக இருந்தாராம்.
Content By sarathkumar.K