
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை இன்று அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது, சென்னை, திருவண்ணாமலை வீடு என அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் 40 இடங்கள் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென இறங்கியுள்ளார்களாம். இதில் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட சில அதிகாரிகள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எ.வ.வேலுவுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி கூட வருமானவரி சோதனையில் தப்பவில்லை. இது மட்டுமல்லாமல் நேற்று இரவே எங்கெங்கு சோதனையிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இரவோடு இரவாக அதிகாரிகள் 40 இடங்களுக்கும் பிரிந்து சென்றுள்ளனர், ஒரே நேரத்தில் 40 இடங்களிலும் சோதனை இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடைபெற்றது கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஜெகத்ரட்சகன் வீட்டில் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் எ.வ.வேலு வீட்டில் ரெய்டு இருப்பது காரணமே வேறு என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள், ஜெகத்ரட்சகன் பணம் மற்றும் அவரது செல்வாக்கு வெளியில் அறிந்தது ஆனால் எ.வ.வேலு சொத்து பின்புலம் இதுவரை பெரும் அளவில் வெளியில் அறியப்படவில்லை. இந்த ரெய்டு முடிவடையும் நிலையில் எ.வ.வேலு திமுகவில் இருக்கும் மிக அதிக சொத்து வைத்துள்ள முக்கியமான புள்ளிகளில் ஒருவராக வெளியில் அறியப்படுவார் இதுதான் திட்டம் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.
எப்படி பார்த்தாலும் இந்த விவகாரத்தில் ரெய்டு நடப்பது குறைந்தது இரண்டு தினங்களாவது செல்லும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலுவும் வருமானவரித்துறை அதிகாரிகள் கேள்விக்கு பதில் அளித்து வருகிறதாகவும் மேலும் பல முக்கிய ஆவணங்கள் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு இந்த எச்சரிக்கையை கொடுத்ததாகவும் 'இரவில் முக்கிய தகவல்கள் வருகின்றன எப்பொழுது வேண்டுமானாலும் ரெய்டு நடக்கலாம் எதிர்பாருங்கள் என சொல்லியதாக தெரிகிறது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் எ.வ.வேலு வீட்டிற்கு உள்ளே வருமானவரித்துறை நுழைந்தது தான் ட்விஸ்ட் என்கின்றனர் சில விஷயம் அறிந்தவர்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கலைஞர் நூற்றாண்டு விழாவில் இருபது ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார், அப்பொழுது பேசிய பேசிய எ.வ.வேலு காலை 8 மணிக்கு திருமணம் நடைபெறவில்லை, அருகிலேயே சக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் திருமணத்தில் கலந்து கொண்டு இங்கு வருகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு 9 மணியிலிருந்து பத்து முப்பதுக்குள் நடத்தி விட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார் அதுவும் நடைபெறவில்லை, அதன்படி பார்த்தால் பெரியார், அண்ணா, கருணாநிதி நேசித்த பகுத்தறிவு திருமணம் சரியாக நடைபெற்றுள்ளது. நான் பகுத்தறிவு திருமணத்தை என் வாழ்க்கையில் செய்து கொண்டவன் எந்த நேரத்தில் என்றால் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6:30 மணிவரை ராகு காலத்தை பார்த்துதான் திருமணம் செய்தேன் எனக்கு குழந்தை பிறக்காமல் இருந்ததா? ரெண்டு ஆண் பிள்ளைகள் சிங்கக்குட்டிக் கொண்டிருக்கிறார்கள்' என பேசியது வேறு தற்போது இணையங்களில் வைரல் ஆகிறது.