24 special

எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்காதான்..! சூடுவைத்த சுப்ரமணியம்...!

Jaishankar
Jaishankar

இந்தியா : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கர் சிஎன்என் செய்திநிறுவனத்திற்கு டவுன்ஹாலில் அளித்த பேட்டியில் அமெரிக்காவை ஒரு பிடி பிடித்துவிட்டார். அமெரிக்காவின் இன்னொரு முகத்தை தோலுரித்து காட்டிய அவர் பாகிஸ்தானுடனான பிரச்சினைகளுக்கு அமெரிக்காவே காரணம் என இந்தியர்களின் எண்ணத்தை பிரதிபலித்தார்.


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக சுப்ரமணியம்  ஜெய்சங்கர் பதவியேற்றது முதல் இந்திய தரப்பு கருத்துக்களை எந்த ஒரு பின்வாங்கலும் இல்லாமல் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உலகமேடைகளில் எடுத்துரைத்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை சி.எஸ்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவுக்கு சவுக்கடி கொடுத்திருந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறுகையில் " அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மையை கொண்டிருக்காது. பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை அமெரிக்கா  மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் பரஸ்பர நலன்களுக்காக இஸ்லாமாபாத்துடன் உறவுகளை முன்னேற்றுவதற்கான வழியை மென்மேலும் பலப்படுத்தும்" என கூறியிருந்தார்.

அதேபோல அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில் " பாகிஸ்தான் எங்களது பங்காளி. அதனுடன் கூட்டாண்மையை பலப்படுத்த தேவையான வழிகளை தேடுவோம்" என கூறியிருந்தார். ஏற்கனவே பாகிஸ்தான் இந்திய எல்லையில் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருப்பதுடன் இந்தியாவிற்கெதிரான செயல்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த அமெரிக்காவின் கருத்துக்கள் இந்தியாவை மிகவும் சீண்டியுள்ளது. அமெரிக்க அதிபரின் கருத்துக்களை அடுத்து செய்தியாளர்களும் சந்தித்த ஜெய்ஷங்கர் " பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை தொடர்ந்து பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது. இந்தியா பாகிஸ்தான் பிரச்சினைகளில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்த நேரடி ஆதரவே காரணம்" என அமெரிக்காவை மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.