24 special

நடு ஆற்றில் விடப்பட்ட காங்கிரஸ்... வெற்றி பெற்ற பாஜக, சிவசேனா போச்சே போச்சே கதறும் கைகள் !

Sivasena
Sivasena

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற மேலவைக்கான தேர்தலில் பாஜக தனது எண்ணிக்கையை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றது, சிவசேனா மற்றும் சரத் பவார் என இரண்டு கட்சிகளும் தாங்கள் நிறுத்திய வேட்பாளரை வெற்றி பெற செய்துள்ளனர். அதே நேரத்தில் இரண்டு இடங்களில் வெற்றி பெற வேண்டிய காங்கிரஸ் ஒரு இடத்தையும் பெறாமல் தோல்வியை தழுவி இருக்கிறது.




இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், சுந்தர் ராஜ சோழன் தெரிவித்ததாவது, ராஜ்யசபாவில் அடித்து ஆடிய பட்னவிஸ் மீண்டும் MLC யிலும் தரமான சம்பவத்தை செய்துவிட்டார்.

MVA கூட்டணி தலா 2 என 6 MLC வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.சிவசேனா தங்களது வேட்பாளரை வெற்றி பெற வைத்துவிட்டது.NCP தன்னுடைய MLA க்களின் எண்ணிக்கையை விட 4 வாக்குகளை அதிகம் பெற்று தங்கள் இரு வேட்பாளர்களை வெற்றி பெற வைத்துவிட்டது.

காங்கிரஸ்ஸை இரண்டு பேருமே சந்தியில்விட்டுவிட்டார்கள்.bசிறுகட்சி, சுயேட்சை  என 29 MLA க்கள் மராட்டிய சட்டமன்றத்தில் இருக்கும் போது,அவர்களை சரி செய்து காங்கிரஸிற்கு 11 MLA வாக்குகளை பெற்று காங்கிரஸின் இரு வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கவில்லை தாக்கரே - பவார் கூட்டணி.

பாஜக 5 வேட்பாளர்களை நிறுத்தி,கூடுதலாக 24 MLA இருந்தால் மட்டுமே 5 பேரும் வெல்ல முடியும் என்ற நிலையில் 27 MLA க்களின் வாக்குகளை கூடுதலாக பெற்று 5 MLCக்களையும் தூக்கிவிட்டார் பட்னவிஸ்..

பட்னவிஸ் தனி ஒருவனாக மஹாராஷ்டிராவில் முப்பெரும் எதிரிகளை வீழ்த்த தயாராக உள்ளார்.2024 தேர்தல் அவருடைய யுக்திகளுக்கு மேலும் வலு சேர்க்குமென தெரிகிறது பொறுத்து இருந்து பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார், இது தவிர்த்து அரசியல் பார்வையாளர் வேணுகோபாலன் தெரிவித்த கருத்து பின்வருமாறு தேவேந்திர ஃபட்னவிஸ்!

பிஹார் சட்டசபைத் தேர்தலுக்காக பிரபாரியாக நியமிக்கப்பட்டார்; பீஹாரில் முதன்முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜெயித்தது.கோவா சட்டசபைத் தேர்தலுக்கும் பிரபாரி! பாஜகவுக்கு வாய்ப்பே இல்லையென்று ஊடகங்கள் ஊதித்தள்ளின. அனைத்து யூகங்களையும் தகர்த்து கோவாவில் பாஜக ஆட்சியமைத்தது.

ராஜ்யசபா தேர்தலில் 3 வேட்பாளர்களில் மூவரும் வெற்றி, சட்டசபை மேல்சபைத் தேர்தலில் 5 வேட்பாளர்களில் ஐவரும் வெற்றி. இத்தனைக்கும் 4 வேட்பாளர்கள் மாத்திரமே ஜெயிக்க வாய்ப்பிருந்தது என குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் கூட்டணி கட்சியான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட காங்கிரஸ் கூட்டணியை கழற்றி விட்டுள்ளது மகாராஷ்டிரா மாநில சட்டமேலவை தேர்தல் முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.